செய்திகள் மலேசியா
பூடி95 குறித்து இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்படவில்லை: ஃபஹ்மி
புத்ராஜெயா:
பூடி95 எரிபொருள் மானிய ஒதுக்கீட்டைக் குறைப்பது குறித்து இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்படவில்லை.
தகவல் தொடர்புத் துறை அமைச்சர் ஃபஹ்மி ஃபட்சில் இதனை கூறினார்.
டீசல் திட்டத்தைச் செயல்படுத்துவது தொடர்பான சிக்கல்களை நாங்கள் தற்போது ஆராய்ந்து வருகிறோம்.
ரோன் 95 எரிபொருள் மானியங்களுக்கான மாதாந்திர ஒதுக்கீட்டைக் குறைப்பது குறித்து எந்த அரசாங்கத் திட்டங்களையும் தாம் அறிவிக்கவில்லை எனத் துணை நிதியமைச்சர் லியூ சின் டோங் நேற்று தெளிவுபடுத்தியதைத் தொடர்ந்து இது வந்துள்ளது.
அதேபோல், இந்த வார அமைச்சரவைக் கூட்டத்தில் வருமானக் குழுக்களை மறுவகைப்படுத்துவது குறித்தும் விவாதிக்கப்படவில்லை.
மடானி அரசாங்கத்தின் செய்தித் தொடர்பாளரும், புத்ராஜெயாவில் உள்ள தனது அமைச்சில் இன்று மாலை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 13, 2026, 5:42 pm
பேராக்கில் 300 கடத்தல் அரிசி மூட்டைகளை போலிஸார் பறிமுதல் செய்தனர்
May 13, 2026, 5:30 pm
ஜோ லோ மீதான விசாரணையை போலிஸ் நிறுத்தாது: ஐஜிபி
May 13, 2026, 4:34 pm
