செய்திகள் மலேசியா
கோலா பாயா தேசிய பள்ளிக்கு 11,070 ரிங்கிட் விளையாட்டு உபகரண நிதி: துணையமைச்சர் யுனேஸ்வரன் அறிவிப்பு
சிகாமாட்:
கோலா பாயா தேசிய பள்ளிக்கு விளையாட்டு உபரணப் பொருள்களை வாங்குவதற்காக தேசிய ஒருமைப்பாட்டு துணையமைச்சரும் சிகாமாட் நாடாளுமன்ற உறுப்பினருமான யுனேஸ்வரன் ராமராஜ் 11,070 ரிங்கிட் வழங்கவுள்ளதாகத் தெரிவித்தார்.
இன்று கோலா பாயா தேசிய பள்ளியின் போட்டி விளையாட்டை அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்த பின் அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
இந்த நிதி உதவி மாணவர்களின் விளையாட்டு திறன், ஒழுக்கம், ஆரோக்கியம், போட்டி திறனை மேம்படுத்தும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
மேலும், கல்வி, விளையாட்டு, மாணவர் வளர்ச்சி சார்ந்த திட்டங்களுக்கு சிகாமாட் நாடாளுமன்ற அலுவலகம் தொடர்ந்து ஆதரவு வழங்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
போட்டி விளையாட்டைச் சிறப்பாக ஏற்று நடத்திய பள்ளி தலைமையாசிரியர், கம்போங் பாயா தலைவர், பெற்றோர்-ஆசிரியர் சங்கம், ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் ஆகியோரின் ஒத்துழைப்பை யுனேஸ்வரன் பாராட்டினார்.
மேலும், இப்போட்டி விளையாட்டிற்கு தனியார் நிறுவனங்களை ஆதரவாளர்களாக இணைத்துள்ள புதிய அணுகுமுறையையும் அவர் பாராட்டினார்.
ஒவ்வொரு அணிக்கும் ஆதரவாளர்களின் நிறுவனப் பெயர்களைச் சூட்டும் இந்த முயற்சி, பள்ளி, சமூகமும் தனியார் துறையும் இணையும் புதிய ஒத்துழைப்பை உருவாக்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 13, 2026, 5:42 pm
பேராக்கில் 300 கடத்தல் அரிசி மூட்டைகளை போலிஸார் பறிமுதல் செய்தனர்
May 13, 2026, 5:31 pm
பூடி95 குறித்து இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்படவில்லை: ஃபஹ்மி
May 13, 2026, 5:30 pm
ஜோ லோ மீதான விசாரணையை போலிஸ் நிறுத்தாது: ஐஜிபி
May 13, 2026, 4:34 pm
