நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

எம்ஏசிசி தலைமை இயக்குநராக டத்தோஶ்ரீ அப்துல் ஹலில் அதிகாரப்பூர்வமாகப் பொறுப்பேற்றார்

புத்ராஜெயா:

மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் (எம்ஏசிசி) புதிய தலைமை ஆணையராக  டத்தோஸ்ரீ அப்துல் ஹலிம் அமான் இன்று அதிகாரப்பூர்வமாகப் பொறுப்பேற்றார்.

முன்னாள் உயர் நீதிமன்ற நீதிபதியான இவரது நியமனம், எம்ஏசிசியில் 42 ஆண்டுகள் பணியாற்றிய பின்னர் நேற்று தனது ஒப்பந்தத்தை அதிகாரப்பூர்வமாக முடித்துக்கொண்ட டான்ஸ்ரீ அஸாம் பாகிக்கு மாற்றாக அமைந்துள்ளது.

சட்டத்துறையில் அப்துல் ஹலீமின் நம்பகத்தன்மையும் அனுபவமும் எம்ஏசிசிக்கு கூடுதல் மதிப்பை வழங்கும் என்று அரசாங்கத்தின் தலைமைச் செயலாளர் டான்ஸ்ரீ ஷம்சுல் அஸ்ரி அபு பாக்கார் கூறினார்.

டத்தோஸ்ரீ அப்துல் ஹலிம் அமான், 2026 மே 13 முதல் எம்ஏசிசியின் தலைமை ஆணையராக நியமிக்கப்பட்டதற்கு வாழ்த்துகள்.

சட்டத் துறையில் உள்ள நம்பகத்தன்மையும் அனுபவமும் தொடர்ந்து கூடுதல் மதிப்பை அளித்து, அதன் பங்கை வலுப்படுத்தினார்.

உள்நாட்டிலும் அனைத்துலக அளவிலும் எம்ஏசிசியை ஒரு மதிப்புமிக்க அமலாக்க அமைப்பாக அதன் நிலையை உயர்த்தும் என்று நான் நம்புகிறேன் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset