செய்திகள் மலேசியா
விடுதியில் மயங்கி விழுந்த முதலாம் படிவ மாணவர் உயிரிழந்தார்
கோலாலம்பூர்:
குவா மூசாங் பாலோவில் உள்ள ஒரு இடைநிலைப் பள்ளி விடுதியில், முதலாம் படிவ மாணவர் ஒருவர் மயங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டார்.
தலையில் ஏற்பட்ட இரத்தக் கசிவு, நுரையீரலில் நீர் கோர்த்திருந்ததால் அவர் நேற்று உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது.
குவா மூசாங் போலிஸ் தலைவர் சிக் சூன் ஃபூ, காலை 8.53 மணிக்கு அந்த மாணவரின் தந்தையிடமிருந்து தனக்குத் தகவல் கிடைத்ததாகவும், பள்ளி விடுதியில் தனது மகன் மயங்கியிருப்பதாக அவர் தெரிவித்ததாகவும் கூறினார்.
அதன் பிறகு, பள்ளி நிர்வாகம் அந்த 13 வயது மாணவரை மேலதிக சிகிச்சைக்காக சுகாதார மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதாக அவர் விளக்கினார்.
இருப்பினும், மருத்துவமனையில் இருந்த மருத்துவ அதிகாரிகள் அந்த மாணவர் இறந்துவிட்டதை உறுதி செய்ததாக அவர் தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து, பிற்பகல் 3.30 மணிக்கு குவா முசாங் மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை நடத்தப்பட்டது.
தலையில் திடீரென ஏற்பட்ட இரத்தக் கசிவு மற்றும் நுரையீரலில் நீர் கோர்த்ததே மரணத்திற்குக் காரணம் என ஆரம்பகட்ட விசாரணையில் கண்டறியப்பட்டதாக அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 14, 2026, 6:11 pm
புனித பூமியில் மேலும் இரண்டு மலேசிய ஹஜ் பயணிகள் உயிரிழந்தனர்
May 14, 2026, 5:30 pm
போலி மை கார்ட் பயன்படுத்திய வெளிநாட்டவர் கைது
May 14, 2026, 5:00 pm
மலேசிய பூப்பந்தின் பொற்கால நாயகன் தே கியூ சான் காலமானார்
May 14, 2026, 3:48 pm
T20 ரோன்95 மானியம் நீக்கப்படவில்லை: அந்தோணி லோக்
May 14, 2026, 3:43 pm
குடிபோதையில் வாகனம் ஓட்டுவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை அவசியம்: யுனேஸ்வரன் வலியுறுத்து
May 14, 2026, 3:42 pm
குவா மூசாங்கில் யானை தாக்கியதில் ஆடவர் உயிரிழந்தார்
May 14, 2026, 2:32 pm
