செய்திகள் மலேசியா
புனித பூமியில் மேலும் இரண்டு மலேசிய ஹஜ் பயணிகள் உயிரிழந்தனர்
மக்கா:
KT12 விமானக் குழுவைச் சேர்ந்த மேலும் இரண்டு மலேசிய ஹஜ் பயணிகள் புனித நிலத்தில் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது, இந்த ஹஜ் பருவத்தில் புனித நிலத்தில் உயிரிழந்த மலேசிய ஹஜ் பயணிகளின் எண்ணிக்கையை ஐந்தாக உயர்த்தியுள்ளது.
இரு பயணிகளும் அல் கிஸ்வா ஹோட்டலில் தங்கியிருந்ததாகத் தாபுங் ஹாஜி இன்று வெளியிட்ட ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அவர்களில் ஒருவர், பேராக்கின் சித்தியாவானைச் சேர்ந்த 72 வயதுடைய ஒரு பெண் ஆவார். அவர் தனது உறவினருடன் இணைந்து ஹஜ்ஜை நிறைவேற்ற பயணம் மேற்கொண்டார்.
"அவர் மூளை இரத்தப்போக்கு காரணமாக, திங்கட்கிழமை (மே 12), மதியம் 12.36 மணியளவில், கிங் அப்துல் அஜிஸ் மருத்துவமனையில் இறந்ததாக உறுதி செய்யப்பட்டது" என்று அந்த அறிக்கை தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், பஹாங்கின் குவாந்தானைச் சேர்ந்த, 67 வயதுடைய ஒரு ஆண் ஹஜ் பயணி, தனது மனைவியுடன் ஹஜ்ஜை நிறைவேற்றச் சென்றிருந்தார்.
நுரையீரலில் தொற்று காரணமாக, நேற்றிரவு 10 மணியளவில் மக்கா மருத்துவ மையத்தில் அவர் இறந்ததாக உறுதி செய்யப்பட்டது.
ஆவணச் சான்றுகள் முடிந்த உடனேயே, இரு உடல்களும் அல்-ஷரயா கல்லறையில் அடக்கம் செய்யப்படுவதற்கு முன், இறுதி தொழுகைக்காக மஸ்ஜிதில் ஹராமுக்கு கொண்டு செல்லப்பட்டன.
"இறந்தவர்களின் அனைத்து குடும்ப உறுப்பினர்களுக்கும் தாபுங் ஹாஜி இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதோடு அவர்களுக்காக பிரார்த்திப்பதாக கூறியுள்ளது.
- சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
May 14, 2026, 5:30 pm
போலி மை கார்ட் பயன்படுத்திய வெளிநாட்டவர் கைது
May 14, 2026, 5:00 pm
மலேசிய பூப்பந்தின் பொற்கால நாயகன் தே கியூ சான் காலமானார்
May 14, 2026, 3:48 pm
T20 ரோன்95 மானியம் நீக்கப்படவில்லை: அந்தோணி லோக்
May 14, 2026, 3:43 pm
குடிபோதையில் வாகனம் ஓட்டுவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை அவசியம்: யுனேஸ்வரன் வலியுறுத்து
May 14, 2026, 3:42 pm
குவா மூசாங்கில் யானை தாக்கியதில் ஆடவர் உயிரிழந்தார்
May 14, 2026, 2:32 pm
