செய்திகள் மலேசியா
சீனர்கள் ஆதிக்கம் செலுத்தும் துறைகளில் இந்தியர்கள் கால்பதிப்பது பாராட்டுக்குரியது: டான்ஸ்ரீ விக்னேஸ்வரன்
பிரிக்பீல்ட்ஸ்:
சீனர்கள் ஆதிக்கம் செலுத்தும் துறைகளில் இந்தியர்கள் கால்பதிப்பது பாராட்டுக்குரியது.
மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்ஏ விக்னேஸ்வரன் இதனை கூறினார்.
அடகுக் கடை என்றாலே சீனர்களின் கடைகள் தான் ஞாபகத்திற்கு வரும்.
அவசர காலத்தில் மக்கள் நகைகளை அடகு வைத்து அதன் மூலம் வரும் பணத்தை வைத்து தான் தங்களின் தேவைகளை பூர்த்தி செய்துக் கொள்வார்கள்.
ஆனால் இன்று இத்துறையில் நமது இந்தியர்களும் கால்பதித்து உள்ளனர்.
அவ்வையில் டிசாரா அசெட்ஸ் வென்சர்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான அடகுக்கடை இன்று பிரிக்பீல்ட்ஸில் அதிகாரப்பூர்வமாக திறப்பு விழா கண்டது.
இவ்வேளையில் அக்கடையின் உரிமையாளர்களுக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
அடகுக் கடை போன்று மற்ற சமூகத்தினர் ஆதிக்கம் செலுத்தும் துறைகளில் நம்மவர்களும் கால்பதித்து வெற்றி பெற வேண்டும்.
இதுவே எனது விருப்பமாகும் என்று டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் கூறினார்.
முன்னதாக இன்றைய அடகுக்கடை திறப்பு விழாவில் மஇகா துணைத் தலைவரும் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ சரவணன், ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தான தலைவர் டான்ஸ்ரீ நடராஜா உட்பட பல பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 14, 2026, 6:11 pm
புனித பூமியில் மேலும் இரண்டு மலேசிய ஹஜ் பயணிகள் உயிரிழந்தனர்
May 14, 2026, 5:30 pm
போலி மை கார்ட் பயன்படுத்திய வெளிநாட்டவர் கைது
May 14, 2026, 5:00 pm
மலேசிய பூப்பந்தின் பொற்கால நாயகன் தே கியூ சான் காலமானார்
May 14, 2026, 3:48 pm
T20 ரோன்95 மானியம் நீக்கப்படவில்லை: அந்தோணி லோக்
May 14, 2026, 3:43 pm
குடிபோதையில் வாகனம் ஓட்டுவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை அவசியம்: யுனேஸ்வரன் வலியுறுத்து
May 14, 2026, 3:42 pm
குவா மூசாங்கில் யானை தாக்கியதில் ஆடவர் உயிரிழந்தார்
May 14, 2026, 2:32 pm
