செய்திகள் மலேசியா
இந்து ஆலய விவகாரத்தில் பிளவுகளை ஏற்படுத்த வேண்டாம்: பிரதமருக்கு குணராஜ் ஆதரவு
கோலாலம்பூர்:
இந்து ஆலய விவகாரம் தொடர்பாக பிரதமர் துறையின் முன்னாள் அமைச்சர் பி. வேதமூர்த்தி முன்வைத்த விமர்சனத்தைத் தொடர்ந்து, செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் குணராஜ், பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமை ஆதரித்துப் பேசியுள்ளார்.
அனைத்துக் கட்சிகளுக்கும் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்தும் உரிமை உண்டு.
ஆனால் அரசாங்கத்தின் மீதான விமர்சனங்கள் நியாயமாகவும் ஆக்கப்பூர்வமாகவும் முன்வைக்கப்பட வேண்டும்.
பொருளாதார நெருக்கடிகள், சவாலான உலகளாவிய சூழ்நிலைகள் உட்பட, நாட்டை நிர்வகிப்பதில் பிரதமர் தற்போது பெரும் சவால்களை எதிர்கொண்டுள்ளார்.
மலேசியா ஒரு பல்லின நாடு. எனவே, அரசாங்கத்தின் ஒவ்வொரு முடிவும் நிச்சயமாகப் பல்வேறு கோணங்களில் பார்க்கப்படும்.
இந்திய சமூகம் உட்பட அனைத்து சமூகத்தினரின் நம்பிக்கைகளையும் கவலைகளையும் நிறைவேற்ற அன்வர் தொடர்ந்து பாடுபடுவார் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.
அவர் ஒரு குறிப்பிட்ட இனத்திற்கான பிரதமர் மட்டுமல்ல, அனைத்து மலேசியர்களுக்குமான பிரதமர் என்று குணராஜ் கூறினார்.
முன்னதாக இந்து ஆலய விவகாரம் தொடர்பாகத் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டதாகக் கூறப்படும் தனது அறிக்கையைத் தெளிவுபடுத்த பிரதமர் எடுத்த நடவடிக்கை, பொதுத் தேர்தலுக்கு முன்னதாக இந்திய சமூகத்தினரின் கோபத்தைத் தணிக்கும் ஒரு முயற்சி மட்டுமே என்று வேதமூர்த்தி கூறியிருந்தார்.
இந்து ஆலயங்களை அரசு அரக்கத்தனமாக சித்தரிக்கிறது என்று குற்றம் சாட்டுவது நியாயமற்றது.
நீண்ட காலமாகத் தொடரும் இந்து ஆலயங்கள் சம்பந்தப்பட்ட நிலப் பிரச்சினைக்கு சிறந்த தீர்வைக் காண்பதற்காக, அரசு உண்மையில் கோவில் குழு, சம்பந்தப்பட்ட தரப்பினர் மற்றும் மாநில அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
இந்தப் பிரச்சினைகளில் பல பத்தாண்டுகளாக இருந்து வருகின்றன, இவற்றுக்கு கவனமான விவாதமும் சட்டரீதியான செயல்முறையும் தேவைப்படுகின்றன என்று குணராஜ் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
June 6, 2026, 9:38 pm
ஜொகூர், நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தல்களில் பெர்சமா கட்சி போட்டியிடும்: ரபிசி
June 6, 2026, 9:36 pm
கெடிலான் உதவித் தலைவர்களாக சைபுடின், ஜலேஹா நியமனம்
June 6, 2026, 6:10 pm
15 நாட்கள் மர்மமாக மாயம்: இறுதியில் உயிருடன் கண்டுபிடிக்கப்பட்ட ஜாஸ்லிண்டா
June 6, 2026, 5:12 pm
மீன்பிடிக்கச் சென்ற சிறுவர்களுக்கு அதிர்ச்சி: வடிகாலில் ஆடவரின் சடலம் கண்டெடுப்பு
June 6, 2026, 2:38 pm
மாராவின் திவேட் கல்வி திட்டம் கிட்டத்தட்ட 100 சதவீத வேலை வாய்ப்பை எட்டியுள்ளது: ஜாஹித்
June 6, 2026, 1:30 pm
