நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பெட்ரோனாஸ் FSO செப்பாட் தளத்தில் விபத்து: 3 பேர் பலி: பெட்ரோனாஸ் அறிவிப்பு

கோலாலம்பூர்: 

திரங்கானு-கிளாந்தான் கடல் நீரில் உள்ள செப்பாட் தளத்தில், நேற்று மீட்புப் படகு பராமரிப்புப் பணியின் போது, அதன் ஒப்பந்ததாரரின் மூன்று ஊழியர்கள் உயிரிழந்ததாகவும், மற்றொருவர் படுகாயமடைந்ததாகவும் பெட்ரோனாஸ் உறுதிப்படுத்தியுள்ளது.

இன்று வெளியிட்ட ஒரு அறிக்கையில், சம்பவத்திற்கான காரணம் குறித்த விசாரணையானது தொடர்புடைய அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் நடைபெற்று வருவதாக பெட்ரோனாஸ் தெரிவித்துள்ளது.

"இறந்தவர்களின் குடும்பங்கள், நண்பர்கள், சக ஊழியர்களுக்கு பெட்ரோனாஸ் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது.

தற்போதைக்கு இந்த வழக்கு திடீர் மரணம் (SDR) என வகைப்படுத்தப்பட்டுள்ளதாக கோலா திரங்கானு மாவட்ட போலிஸ் தலைவர் உதவி ஆணையாளர் அஸ்லி முஹம்மத் நூர் தெரிவித்தார்.

சம்பவத்தின் உண்மையான காரணத்தைக் கண்டறிவதற்கான மேலதிக விசாரணைகள் இன்னும் நடைபெற்று வருவதாக அவர் கூறினார்.

மதியம் 12.50 மணியளவில், நான்கு பாதிக்கப்பட்டவர்களும், கடலுக்குள் இறங்கி, தளத்தின் அடிப்பகுதியில் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்வதற்காக, தளத்தின் மீது இருந்த மீட்புப் படகில் ஏறியபோது இந்தச் சம்பவம் நிகழ்ந்ததாக அவர் தெரிவித்தார்.

"இருப்பினும், அந்தப் படகில் பொருத்தப்பட்டிருந்த கயிறு அல்லது கொக்கி (hook), திடீரென நழுவியதாக நம்பப்படுகிறது.

"இந்தச் சம்பவம், படகும், அதிலிருந்த அனைத்துப் பாதிக்கப்பட்டவர்களும் கடலில் விழுவதற்குக் காரணமாகியது" என்று தொடர்பு கொள்ளப்பட்ட போது அவர் கூறினார்.

-சங்கீர்த்தனா 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset