நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

15,000க்கும் மேற்பட்ட சமூகங்களுக்கு உதவி செய்து நஸ்ரி பிரேம் நசீர் மலேசிய இளைஞர்களின் குரலை உலக அரங்கிற்கு உயர்த்தியுள்ளார்

கோலாலம்பூர்:

கிட்டத்தட்ட 15,000க்கும் மேற்பட்ட சமூகங்களுக்கு உதவி செய்து நஸ்ரி பிரேம் நசீர் மலேசிய இளைஞர்களின் குரலை உலக அரங்கிற்கு உயர்த்தியுள்ளார்.

மலேசிய இளைஞர்கள் அனைத்துலக அரங்கில் தொடர்ந்து தமக்கென ஒரு பெயரை நிலைநாட்டி வரும் நிலையில், மலாயா பல்கலைக்கழகத்தின் சட்ட மாணவரான முஹம்மது நஸ்ரி பிரேம் நசீர், தென்கிழக்கு ஆசியாவில் சமூக மேம்பாடு, இளைஞர் அதிகாரமளித்தலுக்கு ஆற்றிய குறிப்பிடத்தக்க பங்களிப்பிற்காக அங்கீகரிக்கப்பட்டுள்ளார்.

தற்போது மலாயா பல்கலைக்கழகத்தில் கர்பால் சிங் கல்வி உதவித்தொகையின் கீழ் இளங்கலைச் சட்டக் கல்வி பயின்று வரும் நஸ்ரி, 'பினா மலேசியா' என்ற இளைஞர் அமைப்பின் நிறுவனர், நிர்வாக இயக்குநராக உள்ளார்.

அவர் தலைமை தாங்கும் இந்த அமைப்பு பல்வேறு அடிமட்ட முயற்சிகள் மூலம் கல்வி, இளைஞர் அதிகாரமளித்தல், சமூக மேம்பாடு ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது.

அவரது ஈடுபாடு முழுவதும், இ-ஹெய்லிங் ஓட்டுநர்களின் குழந்தைகளுக்கான இலவசக் கல்விக் கட்டணத் திட்டம், தமிழ் பள்ளி மாணவர்களுக்கான தலைமைத்துவ முகாம், ஒற்றைத் தாய்மார்களுக்கான தொழில்முனைவோர் பயிற்சி உள்ளிட்ட 15,000க்கும் மேற்பட்ட தனிநபர்களுக்குப் பயனளிக்கும் பல்வேறு திட்டங்களை நஸ்ரி வெற்றிகரமாக வழிநடத்தியதாகக் கூறப்படுகிறது.

மேலும், மலேசியாவில் பல மொழிகளில் வெளியிடப்பட்ட, குழந்தை பாலியல் சீண்டல் குறித்த விழிப்புணர்வுக்கான முதல் கதைப் புத்தகமான புராஜெக் லிண்டுங்-ஐ அவர் தயாரித்து சரித்திரம் படைத்துள்ளார்.

குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் ஆற்றிய பங்களிப்பிற்காக இந்த முயற்சி மலேசிய சாதனைப் புத்தகத்தால் அங்கீகரிக்கப்பட்டது.

அனைத்துலக அளவில், நஸ்ரி யுனெஸ்கோ எஸ்டிஜி 4 இளைஞர், மாணவர் வலையமைப்பு, யுனிசெஃப் மலேசிய இளைஞர் ஆலோசனைக் குழு ஆகியவற்றில் தனது ஈடுபாட்டின் மூலம் இளைஞர்களின் குரல்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதில் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறார்.

அமைதி, நிலைத்தன்மை தொடர்பான பல ஆசியான் மாநாடுகளிலும் அவர் பங்கேற்றதன் மூலம், வட்டார வளர்ச்சிப் பிரச்சினைகளில் மலேசிய இளைஞர்களின் பங்களிப்பை வலுப்படுத்தினார்.

அவரது அர்ப்பணிப்பு மற்றும் சாதனைகளுக்காக, கூட்டரசுப் பிரதேச தேசிய இளைஞர் பிரிமியர் விருது, ஸ்டார் கோல்டன் ஹார்ட்ஸ் விருது உள்ளிட்ட பல அங்கீகாரங்களை நஸ்ரி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset