நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அடுத்த பொதுத் தேர்தலில் மஇகா வேட்பாளர்களின் வெற்றிக்கு மலேசிய மக்கள் சக்தி கட்சி துணை நிற்கும்: டத்தோஸ்ரீ தனேந்திரன்

செனவாங்:

அடுத்த பொதுத் தேர்தலில் மஇகா வேட்பாளர்களின் வெற்றிக்கு மலேசிய மக்கள் சக்தி கட்சி துணை நிற்கும்.

அக் கட்சியின் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ  ஆர்.எஸ். தனேந்திரன் இதனை கூறினார்.

மலேசிய மக்கள் சக்தி கட்சியின் தேசிய அலவிலான பாஜாபா கருத்தரங்கு இன்று செனவாங்கில் நடைபெற்றது.

தேர்தல் நெருங்கி கொண்டிருக்கும் வேளையில் இக்கருத்தரங்கு மிகவும் முக்கியமானதாகும்.

குறிப்பாக இம்முறை மஇகாவுடன் இணைந்து இந்த கருத்தரங்கை மக்கள் சக்தி கட்சி நடத்துகிறது.

இவ்வேளையில் மஇகாவின் தேசியத் தலைவத் டான்ஸ்ரீ விக்னேஸ்வரனுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அதே வேளையில் நாட்டில் நிலவி வரும் அரசியல் சூழ்நிலை அனைவருக்கும் தெரியும். தேர்தலும் நெருங்கிக் கொண்டிருக்கிறது.

ஆக இந்த தேர்தலை எதிர்கொள்ள மலேசிய மக்கள் சக்தி கட்சி தயாராக உள்ளது.

மேலும் வரும் தேர்தலில் மஇகாவுடன் மலேசிய மக்கள் சக்தி கட்சி இணைந்து செயல்படும்.

குறிப்பாக இந்த தேர்தலில் மஇகா போட்டியிடும் தொகுதிகளின் அதன் வேட்பாளர்களின் வெற்றிக்கு மலேசிய மக்கள் சக்தி கட்சி பாடுபடும்.

இது என்னுடைய வாக்குறுதி என்று டத்தோஸ்ரீ தனேந்திரன் கூறினார்.

தேர்தலில் ஒரு வாக்கு கூட மிகவும் முக்கியம். அதற்கு ஒவ்வொரு கட்சிகளின் பாஜாபா அதிகாரிகளின் பங்கு மிகவும் முக்கியம்.

ஆகவே இக்கருத்தரங்கின் முக்கியத்துவத்தை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset