செய்திகள் மலேசியா
வரும் பொதுத் தேர்தலில் இந்தியர்களின் உரிமைகளை மதிக்கும் தலைவருக்கே ஆதரவு: டான்ஸ்ரீ விக்னேஸ்வரன்
செனவாங்:
அடுத்த பொதுத் தேர்தலில் இந்தியர்களின் உரிமைகளை மதிக்கும் மலாய்க்காரத் தலைவருக்கே நாம் ஆதரவு வழங்க வேண்டும்.
மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ. விக்னேஸ்வரன் இதனை கூறினார்.
மலேசியாவில் மலாய்க்காரர் தான் பிரதமராக பொறுப்பேற்க முடியும். நாம் என்ன செய்தாலும் அதை மாற்ற முடியாது.
அதனால் இந்திய சமுதாயத்தின் உரிமையையும் குரலையும் கேட்கும் தலைவருக்கே நமது ஆதரவு தொடர வேண்டும்.
முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் நம் சமுதாயத்திற்கு பல நல்லதை செய்தார். ஆனால் அவர் தோல்வி கண்டு தற்போது சிறையில் உள்ளார்.
இப்போது டத்தோஸ்ரீ அன்வார் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் இருந்தாலும் அவர் சமுதாயத்தின் தேவைகளை பூர்த்தி செய்ய உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.
ஆக அடுத்த பொதுத் தேர்தலில் நாம் ஏமாறக்கூடாது. நம்மை மதிக்கும் தலைவர்களுக்கு மட்டுமே நமது ஆதரவு என்ற முடிவை எடுக்க வேண்டும்.
இதுவே தேசிய அரசியல் நீரோடையில் இந்தியர்களின் பங்களிப்பையும் குறள்களையும் உறுதி செய்யும்.
மலேசிய மக்கள் சக்தி கட்சியின் தேசிய அலவிலான பாஜாபா கருத்தரங்கை தொடக்கி வைத்த டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் இவ்வாறு கூறினார்.
கடந்த காலங்களில் இரு கட்சிகளுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் இருந்திருக்கலாம்.
ஆனால் சமுதாயத்தின் நலனை கருதி இவ்விரு கட்சிகளும் ஒன்றிணைவதில் எந்த தவறும் இல்லை.
ஆக வரும் பொது தேர்தலில் இரு கட்சிகளும் இணைந்து செயல்படும்.
குறிப்பாக தற்போது மஇகா குறித்து ஒரு சில தவறுதலாக பேசி வருகின்றனர்.
நாங்கள் ஒன்றும் செய்யவில்லை என்று கூறுபவர்கள் கட்சி செய்து உள்ளதை மறந்து விடுகின்றனர்.
இது போன்ற நபர்கள் வாயை வாடகைக்கு விடுபவர்கள் ஆவர்.
அதனால் அவர்களுக்கு பதில் சொல்லி எந்த பயனும் இல்லை என்று டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 24, 2026, 10:51 pm
கல்வி நிறுவனங்களில் பாலியல் முறைகேடு வழக்குகள் அதிகரிப்பு; கவலையளிக்கிறது: டத்தோ சிவக்குமார்
May 24, 2026, 12:55 pm
தேசிய கால்பந்து வீரரின் சொகுசு வாகனம் ஜேபிஜேவால் பறிமுதல் செய்யப்பட்டது
May 24, 2026, 9:45 am
