செய்திகள் மலேசியா
25 புதிய கிளைகள், 3,000க்கும் மேற்பட்ட புதிய உறுப்பினர்கள்; கோத்தா ராஜா கெஅடிலான் அடிமட்டத்தை வலுப்படுத்துகிறது: குணராஜ்
கிள்ளான்:
கெஅடிலான் கோத்தா ராஜா தனது போராட்டப் பயணத்தில் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளது.
அது வெற்றிகரமாக 25 புதிய கிளைகளை நிறுவியதுடன் 3,000க்கும் மேற்பட்ட புதிய உறுப்பினர்கள் கட்சியில் இணைந்து பதிவு செய்துள்ளது.
இது கெஅடிலான் போராட்டத்தின் மீதான மக்களின் நம்பிக்கை மேலும் வலுப்பெற்று விரிவடைந்து வருவதை நிரூபிக்கும் ஒரு சாதனையாகும் என்று செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் குணராஜ் கூறினார்.
இந்த வளர்ச்சி வேகம் வெறும் ஒரு எண் மட்டுமல்ல. களத்திலும், தொகுதியிலும், சமூகத்தின் இதயங்களிலும் கெஅடிலான் கோத்தாராஜா தங்களுக்குத் துணையாக நிற்கிறது என்ற மக்களின் பெருகிவரும் நம்பிக்கையின் பிரதிபலிப்பே இது.
தங்கள் அர்ப்பணிப்பு, நெருங்கிய ஒத்துழைப்பு, அசைக்க முடியாத மனப்பான்மைக்காக இதில் ஈடுபட்ட அனைவருக்கும் வாழ்த்துகளும் பாராட்டுகளும்.
இதுபோன்ற திட்டங்கள் அப்பகுதியில் ஒரு சுறுசுறுப்பான, நேர்மறையான அரசியல் சூழலை மீண்டும் உயிர்ப்பித்து அடிமட்ட வலுவிற்கு உயிர் நாடியாகவும் இருக்கின்றன.
இது ஒவ்வொரு மாதமும் இடைவிடாமல் தொடர்ந்து இயங்க வேண்டும்.
பண்டார் செந்தோசாவில் 500க்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்ட கலந்துரையாடலுக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த கோத்தா ராஜா தொகுதித் தலைவரும், கெஅடிலான் மத்திய செயற்குழு உறுப்பினருமான குணராஜ் இவ்வாறு கூறினார்.
கட்சியை வலுப்படுத்துதல், மக்களின் பங்களிப்பு, தொடர்ச்சியான அடிமட்ட அணுகுமுறை ஆகியவை ஒரு விருப்பத் தேர்வு அல்ல. அவை மக்களுக்கு நாம் ஆற்ற வேண்டிய கடமையாகும்.
மக்கள் நம்முடன் இருக்கும் வரை, நாம் தொடர்ந்து போராடுவோம். உறுப்பினர்கள் கூடினால் நமது போராட்டமும் வலுப்பெறும்.
குறிப்பாக கட்சியை விட்டு பல தலைவர்கள் வெளியேறினால் கெஅடிலான் இன்னும் வலுவாக உள்ளது என்பதை இது காட்டுகிறது என்று குணராஜ் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 24, 2026, 10:51 pm
கல்வி நிறுவனங்களில் பாலியல் முறைகேடு வழக்குகள் அதிகரிப்பு; கவலையளிக்கிறது: டத்தோ சிவக்குமார்
May 24, 2026, 12:55 pm
தேசிய கால்பந்து வீரரின் சொகுசு வாகனம் ஜேபிஜேவால் பறிமுதல் செய்யப்பட்டது
May 24, 2026, 9:45 am
