செய்திகள் மலேசியா
தேசிய கால்பந்து வீரரின் சொகுசு வாகனம் ஜேபிஜேவால் பறிமுதல் செய்யப்பட்டது
அலோர்ஸ்டார்:
தேசிய கால்பந்து வீரரின் சொகுசு வாகனம் ஜேபிஜே அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டது.
கடந்த வியாழக்கிழமை இந்த மாவட்டத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடத்தப்பட்ட சொகுசு வாகன சிறப்பு நடவடிக்கையின்போது இந்த டொயோட்டா வெல்ஃபயர் வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.
இந்த நடவடிக்கையை கெடா சாலைப் போக்குவரத்துத் துறையின் மோட்டார் சைக்கிள் அமலாக்கப் பிரிவு மேற்கொண்டது.
கெடா ஜேபிஜே இயக்குநர் ஸ்டீன் வான் லுடாம் கூறுகையில்,
அந்த வாகனத்தை கால்பந்து வீரரின் மைத்துனர் ஓட்டி வந்ததாகவும், அது காலை 11.30 மணிக்கு அலோர் ஸ்டார் சிறைச்சாலைக்கு முன்பாகப் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் தெரிவித்தார்.
காலாவதியான வரி, காப்பீட்டுப் பாதுகாப்பு இல்லாமல் அந்த வாகனம் ஓட்டப்பட்டதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 24, 2026, 10:51 pm
கல்வி நிறுவனங்களில் பாலியல் முறைகேடு வழக்குகள் அதிகரிப்பு; கவலையளிக்கிறது: டத்தோ சிவக்குமார்
May 24, 2026, 9:45 am
