நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கல்வி நிறுவனங்களில் பாலியல் முறைகேடு வழக்குகள் அதிகரிப்பு; கவலையளிக்கிறது: டத்தோ சிவக்குமார்

கோலாலம்பூர்:

சமீப காலமாக கல்வி நிறுவனங்களில் பாலியல் முறைகேடு குற்றச்சாட்டுகள் தொடர்பான வழக்குகள் அதிகரித்து வருவது கவலையளிக்கும் வகையில் உள்ளது.

டிஎஸ்கே சமூக அமைப்பின் தலைவர் டத்தோ ந. சிவக்குமார் இதனை கூறினார்.

பள்ளிகள், மாணவர்கள் அறிவைப் பெறுவதற்கும் தங்கள் எதிர்காலத்தை உருவாக்குவதற்கும் மிகவும் பாதுகாப்பான இடமாக இருக்க வேண்டும்.

தவிர, மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் அச்சத்தையும் மன அதிர்ச்சியையும் ஏற்படுத்தும் இடமாக இருக்கக்கூடாது.

மாணவர்கள், சிறார்களுக்கு எதிரான பாலியல் முறைகேடு தொடர்பான ஒவ்வொரு குற்றச்சாட்டும் தீவிரமாக எடுத்துக் கொள்ளப்பட வேண்டும்.

ஏனெனில், அது சட்ட மீறல் மட்டுமல்ல, பாதிக்கப்பட்டவரின் நம்பிக்கை, பாதுகாப்பிற்குச் செய்யப்படும் ஒரு துரோகமும் ஆகும்.

மாணவர்கள் சம்பந்தப்பட்ட பாலியல் முறைகேடு ஒரு சிறிய விஷயமல்ல. பாதிக்கப்பட்டவர்கள் அனுபவிக்கும் மன அதிர்ச்சியின் விளைவுகள் நீண்ட காலம் நீடிக்கக்கூடியவை.

மேலும் அவை அவர்களின் உணர்ச்சிகள், தன்னம்பிக்கை மற்றும் எதிர்காலத்தைப் பாதிக்கக்கூடும்.

இன்னும் கவலைக்குரிய விஷயம் என்னவென்றால், பாதுகாப்பிற்கான இடமாக இருக்க வேண்டிய கல்வி நிறுவனங்கள், தற்போது இது போன்ற வழக்குகளுடன் தொடர்புபடுத்தப்படத் தொடங்கியுள்ளன என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் கூறினார்.

ஒவ்வொரு வழக்கும் சட்டத்தின்படி நியாயமான, வெளிப்படையான விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும்.

குறிப்பாக குறுகிய காலத்திற்குள் இதுபோன்ற குற்றச்சாட்டுகள் மேலும் மேலும் வெளிவந்துள்ள நிலையில், இந்த நேரத்தில் மக்களின் கவலைகளை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது என்று டத்தோ சிவக்குமார் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்


தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset