செய்திகள் மலேசியா
லெபனானில் ட்ரோன் வெடித்ததில் மலேசிய ராணுவ வீரர்கள் யாரும் காயமடையவில்லை: காலிட் நோர்டின்
புத்ராஜெயா:
லெபனானில் ட்ரோன் வெடித்ததில் மலேசிய ராணுவ வீரர்கள் யாரும் காயமடையவில்லை.
தற்காப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ காலிட் நோர்டின் இதனை கூறினார்.
லெபனானில் உள்ள நக்கூராவில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் இடைக்காலப் படைத் தலைமையகத்திற்கு அருகே, நேற்று ஆளில்லா விமானம் சம்பந்தப்பட்ட தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்த வெடிவிபத்தில் மலேசிய இராணுவ வீரர்கள் யாரும் காயமடையவில்லை.
யூனிஃபில் தலைமையகத்தின் கீழ் இராணுவப் பணியாளர் அதிகாரிகளாக பணியாற்றும் ஐந்து அதிகாரிகளுக்கான ஓய்விடமான மலேசியா ஹவுஸ் அருகே, மலேசிய நேரப்படி மாலை சுமார் 5.30 மணியளவில் இந்த வெடிவிபத்து நிகழ்ந்தது.
தெற்கு லெபனானில் உள்ள மலேசியப் பட்டாலியனின் (மல்பாட் 850-13) அமைதிப்படையினரின் முக்கியப் பணியிடமான கேம்ப் மராகாவிலிருந்து சுமார் 24 கி.மீ. தொலைவில் இந்த வெடிவிபத்து நிகழ்ந்தது.
இருந்த போதிலும் இந்த சம்பவத்தில் நமது வீரர்களுக்கு பாதிப்பில்லை என்று டத்தோஸ்ரீ காலிட் நோர்டின் கூறினான்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
June 6, 2026, 9:38 pm
ஜொகூர், நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தல்களில் பெர்சமா கட்சி போட்டியிடும்: ரபிசி
June 6, 2026, 9:36 pm
கெடிலான் உதவித் தலைவர்களாக சைபுடின், ஜலேஹா நியமனம்
June 6, 2026, 6:10 pm
15 நாட்கள் மர்மமாக மாயம்: இறுதியில் உயிருடன் கண்டுபிடிக்கப்பட்ட ஜாஸ்லிண்டா
June 6, 2026, 5:12 pm
மீன்பிடிக்கச் சென்ற சிறுவர்களுக்கு அதிர்ச்சி: வடிகாலில் ஆடவரின் சடலம் கண்டெடுப்பு
June 6, 2026, 2:38 pm
மாராவின் திவேட் கல்வி திட்டம் கிட்டத்தட்ட 100 சதவீத வேலை வாய்ப்பை எட்டியுள்ளது: ஜாஹித்
June 6, 2026, 1:30 pm
