செய்திகள் மலேசியா
பாஸ் பேரணி; மருத்துவ உதவி, ஆம்புலன்ஸ் சேவைகளை வழங்க உலு சிலாங்கூர் கெஅடிலான் தயார்: டாக்டர் சத்திய பிரகாஷ்
செரண்டா:
பாஸ் பேரணியின் போது மருத்துவ உதவி, ஆம்புலன்ஸ் சேவைகளை வழங்க உலு சிலாங்கூர் கெஅடிலான் தயாராக உள்ளது.
உலு சிலாங்கூர் கெஅடிலான் தலைவர் டாக்டர் சத்யா பிரகாஷ் நடராஜன் இதனை கூறினார்.
அரசியல் வேறுபாடுகளைக் கடந்து, மனிதாபிமான அடிப்படையில், வரும் சனிக்கிழமையன்று நடைபெறும் பேரணியில் பங்கேற்பவர்களுக்கு இந்த சேவை வழங்க நாங்கள் தயார்.
கூட்டத்தில் கலந்து கொள்ளும் பொதுமக்களுக்குப் பாதுகாப்பு, அவசரகால உதவிகளை வழங்குவதற்கான தயாரிப்பு நடவடிக்கையாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அரசியல் கருத்து வேறுபாடுகள், எந்தவொரு கட்சியும் கருத்துச் சுதந்திரத்தை மறுப்பதற்கு ஒரு காரணமாக இருக்கக்கூடாது.
அது பொறுப்புடன் மேற்கொள்ளப்படுவதோடு, பொது அமைதியைப் பாதிக்காத வரையிலும் இருக்க வேண்டும்.
மலேசிய அரசியலமைப்பின் கீழ் கருத்துச் சுதந்திரத்திற்கு உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது.
சீர்திருத்தச் செயல் திட்டத்தை போராட்டத்தின் மையமாக முன்னிறுத்தும் கெஅடிலா. ஆதரிக்கும் கொள்கைக்கு இது இணக்கமாகவும் உள்ளது என்று நாங்கள் நம்புகிறோம் என்று அவர் ஒரு ஊடக அறிக்கையில் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
June 6, 2026, 9:38 pm
ஜொகூர், நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தல்களில் பெர்சமா கட்சி போட்டியிடும்: ரபிசி
June 6, 2026, 9:36 pm
கெடிலான் உதவித் தலைவர்களாக சைபுடின், ஜலேஹா நியமனம்
June 6, 2026, 6:10 pm
15 நாட்கள் மர்மமாக மாயம்: இறுதியில் உயிருடன் கண்டுபிடிக்கப்பட்ட ஜாஸ்லிண்டா
June 6, 2026, 5:12 pm
மீன்பிடிக்கச் சென்ற சிறுவர்களுக்கு அதிர்ச்சி: வடிகாலில் ஆடவரின் சடலம் கண்டெடுப்பு
June 6, 2026, 2:38 pm
மாராவின் திவேட் கல்வி திட்டம் கிட்டத்தட்ட 100 சதவீத வேலை வாய்ப்பை எட்டியுள்ளது: ஜாஹித்
June 6, 2026, 1:30 pm
