செய்திகள் மலேசியா
ஜோ லோ, டிரம்ப்பிடம் மன்னிப்புக் கோரியதாகத் தகவல் வெளியாகியுள்ளது
கோலாலம்பூர்:
தலைமறைவான தொழிலதிபர் ஜோ லோ, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பிடம் மன்னிப்புக் கோரி மனு தாக்கல் செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
செவ்வாயன்று வால் ஸ்ட்ரீட் ஜர்னலில் வெளியான ஒரு அறிக்கையை மேற்கோள் காட்டி,
இந்த விவகாரம் குறித்து அறிந்த ஒரு வட்டாரத்தின்படி, இந்த மனு கடந்த சில வாரங்களுக்குள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த விண்ணப்பம் அங்கீகரிக்கப்பட்டால், அமெரிக்காவில் ஜோ லோ மீதுள்ள அனைத்து குற்றவியல் குற்றச்சாட்டுகளும் கைவிடப்படும்.
மேலும், அமெரிக்க நீதித்துறை இணையதளத்தில் ஜோ லோ என்ற பெயரில் ஒரு கோரிக்கை நிலுவையில் உள்ளதாக அந்த அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது.
இந்த ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட இந்த விண்ணப்பத்தின் விவரங்கள், தண்டனைக் காலம் முடிந்த பிறகான மன்னிப்பு என வகைப்படுத்தப்பட்டுள்ளன.
ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தால் இந்த அறிக்கையை இன்னும் உறுதிப்படுத்த முடியவில்லை.
இருப்பினும், ஜோ லோவின் மன்னிப்பு விண்ணப்பம் தற்போது வெள்ளை மாளிகையின் கண்காணிப்பில் இல்லை அல்லது அதற்கு அவர்கள் முக்கியத்துவம் கொடுக்கவில்லை என்று வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர் வால் ஸ்ட்ரீட் ஜர்னலிடம் தெரிவித்தார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
June 6, 2026, 9:38 pm
ஜொகூர், நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தல்களில் பெர்சமா கட்சி போட்டியிடும்: ரபிசி
June 6, 2026, 9:36 pm
கெடிலான் உதவித் தலைவர்களாக சைபுடின், ஜலேஹா நியமனம்
June 6, 2026, 6:10 pm
15 நாட்கள் மர்மமாக மாயம்: இறுதியில் உயிருடன் கண்டுபிடிக்கப்பட்ட ஜாஸ்லிண்டா
June 6, 2026, 5:12 pm
மீன்பிடிக்கச் சென்ற சிறுவர்களுக்கு அதிர்ச்சி: வடிகாலில் ஆடவரின் சடலம் கண்டெடுப்பு
June 6, 2026, 2:38 pm
மாராவின் திவேட் கல்வி திட்டம் கிட்டத்தட்ட 100 சதவீத வேலை வாய்ப்பை எட்டியுள்ளது: ஜாஹித்
June 6, 2026, 1:30 pm
