செய்திகள் மலேசியா
வாகனம் மோதி வடிகாலில் தூக்கி வீசப்பட்ட வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்
கிள்ளான்:
இன்று (புதன்கிழமை) அதிகாலையில் ஜாலான் காப்பார் பத்து 5-இல், ஒரு வாகனத்தால் மோதப்பட்டதாக நம்பப்படும் நிலையில், ஆடவர் ஒருவர் ஒரு வடிகாலில் வீசப்பட்டு உயிரிழந்துள்ளார்.
மலேசிய தீயணைப்பு, மீட்புத் துறையின் (ஜே.பி.பி.எம்) சிலாங்கூர் நடவடிக்கைப் பிரிவு உதவி இயக்குநர் அஹ்மத் முக்லிஸ் முக்தார், அதிகாலை 3.23 மணிக்கு இந்தச் சம்பவம் குறித்த அவசர அழைப்பைத் தாம் பெற்றதாகத் தெரிவித்தார்.
கிள்ளான் உத்தரா தீயணைப்பு, மீட்பு நிலையத்தைச் சேர்ந்த ஏழு உறுப்பினர்களும் அதிகாரிகளும் சுமார் ஐந்து கிலோமீட்டர் தொலைவில் உள்ள சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றதாக அவர் கூறினார்.
"ஐந்து நிமிடங்களுக்குப் பின்னர் சம்பவ இடத்தை வந்தடைந்ததும், 30 வயதுக் கடந்த பாதிக்கப்பட்டவர், இரண்டு மீட்டர் ஆழமான வடிகாலில் இருப்பதைத் தீயணைப்புக் குழு கண்டறிந்தது" என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
தீயணைப்பு உறுப்பினர்கள் பின்னர் ஒரு ஸ்ட்ரெச்சரைப் பயன்படுத்தி பாதிக்கப்பட்டவரைத் தூக்கினர். அதற்குப் பின்னர், அந்த ஆண் சம்பவ இடத்திலேயே இறந்ததாக சுகாதார அமைச்சின் அதிகாரி உறுதிப்படுத்தியதாக அவர் கூறினார்.
-சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
June 6, 2026, 9:38 pm
ஜொகூர், நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தல்களில் பெர்சமா கட்சி போட்டியிடும்: ரபிசி
June 6, 2026, 9:36 pm
கெடிலான் உதவித் தலைவர்களாக சைபுடின், ஜலேஹா நியமனம்
June 6, 2026, 6:10 pm
15 நாட்கள் மர்மமாக மாயம்: இறுதியில் உயிருடன் கண்டுபிடிக்கப்பட்ட ஜாஸ்லிண்டா
June 6, 2026, 5:12 pm
மீன்பிடிக்கச் சென்ற சிறுவர்களுக்கு அதிர்ச்சி: வடிகாலில் ஆடவரின் சடலம் கண்டெடுப்பு
June 6, 2026, 2:38 pm
மாராவின் திவேட் கல்வி திட்டம் கிட்டத்தட்ட 100 சதவீத வேலை வாய்ப்பை எட்டியுள்ளது: ஜாஹித்
June 6, 2026, 1:30 pm
