நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

டான்ஸ்ரீ நடராஜா தலைமையில் வம்சம் அமைப்பின் புத்தர காமஸ்தி யாகம்; பத்துமலையில் நடைபெறுகிறது: முனைவர் சத்தியவதி

கோலாலம்பூர்:

கோலாலம்பூர் ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தான தலைவர் டான்ஸ்ரீ ஆர். நடராஜா தலைமையில் வம்சம் அமைப்பின் புத்தர காமஸ்தி யாகம் பத்துமலையில் நடைபெறுகிறது.


குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதியர்களுக்கு அறிவியல் மற்றும் ஆன்மீக வழிகளில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் இந்த யாகம் நடைபெறுகிறது.

வம்சம் புத்திர கமஸ்தி யாகம் எனும் இந்த யாகம் வரும் ஜூன் 7ஆம் தேதி காலை 9 மணிக்கு பத்துமலை திருத்தளம் பகுதியில் நடைபெறவுள்ளது.

கரு உருவாகி வம்சம் விருத்தியாக இறைவனை பிரார்த்தனை செய்யும் யாகமே ‘வம்சம் புத்திர கமஸ்தி யாகம்’ என்று வம்சம் அமைப்பின் தலைவர் சத்தியவதி தெரிவித்தார்.

கடந்த 8 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் வம்சம் அமைப்பு, மலேசியா முழுவதும் 500க்கும் மேற்பட்ட தம்பதியர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க வழிகாட்டியாக இருந்துள்ளது.

மேலும், குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதியர்கள் இந்த யாகத்தில் கட்டாயம் கலந்து கொண்டு பயன் பெற வேண்டும் எனவும் அவர் அழைப்பு விடுத்தார்.

சாத்தியமற்றதையும் சாத்தியமாக்குவோம் என்ற கருப்பொருளில் வம்சம் அமைப்பு செயல்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

நிகழ்ச்சியில் மருத்துவ மற்றும் ஆன்மீக நிபுணர்கள் கலந்து கொண்டு விளக்க உரைகள் வழங்கவுள்ளனர்.

அறிவியல் மருத்துவமாகவும், ஆன்மீகம் நம்பிக்கையாகவும் உள்ளது என முனைவர் சத்தியவதி கூறினார்.

அன்றைய தினம் ஏன் கர்ப்பம் தரிக்க முடியவில்லை என்பது தொடர்பில் விரிவான விளக்கத்தை வழங்கப்படும்.

மலேசியர்களின் மக்கள் தொகை வளர்ச்சி குறைந்து வருகிறது. கடந்த ஆண்டு 1.4 விழுக்காடு மட்டுமே மக்கள் தொகை உயர்ந்துள்ளது  என்று டாக்டர் புவனேஸ்வரன் வேலுபிள்ளை கூறினார்.

பெண்களுக்கு பல்வேறு உடல்நலப் பிரச்சினைகள் ஏற்படுவதால் குழந்தை பாக்கியம் தாமதமாகலாம் என்றும், காலம் தாழ்த்தாமல் மருத்துவர்களின் ஆலோசனைகளை பெறுவது அவசியம் என்று டாக்டர் உமா வலியுறுத்தினார்.
மேலும் ஆன்மீகம் மனிதர்களுக்கு மன உறுதியையும் அமைதியையும் அளிக்கிறது. நமது குறைகளை தீர்ப்பதில் ஆன்மீகத்தின் பங்கு அளப்பரியது.

வேத மந்திரங்கள் வாழ்க்கை முறையையும், எப்படி வாழ வேண்டும் என்பதையும் எடுத்துரைக்கின்றன என்று கிரி குருக்கள் தெரிவித்தார்.

ஆகவே மிகவும் பயனுள்ள இந்நிகழ்ச்சியில் அனைவரும் கலந்து பயன் பெறுமாறு கவிமாறன் கேட்டுக் கொண்டார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset