நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

வெள்ளத் தடுப்பு கட்டுமானங்களுக்கு முற்றுப்புள்ளி: அமைச்சர் ஹன்னா யோஹ்

கோலாலம்பூர்: 

2015 ஆம் ஆண்டு முதல், ஜின்ஜாங், பத்து வெள்ளத் தேக்கக் குளங்களுக்குள் உள்ள 17 நில மனைகள், மேம்பாட்டாளர்களுக்கு மாற்றப்பட்டு அந்தக் குளங்களின் திறன் சுமார் 70 சதவீதம் சுருங்குவதற்குக் காரணமாகியுள்ளது.

இந்தப் பிரச்சினையை வெளிப்படுத்திய கூட்டாட்சிப் பிரதேசபிரதமர் துறை அமைச்சர்  ஹன்னா யோஹ், அரசாங்கம் இதனைத் தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார். மேலும், அங்குள்ள நிலத்தில் ஏதேனும் மேம்பாட்டு பணிகளை நிறுத்துமாறும் அவர் உத்தரவிட்டார்.

"வெள்ளத் தேக்கக் குளங்களின் செயல்பாட்டை சமரசம் செய்யும் மேம்பாட்டைத் தொடர மடானி அரசாங்கம் அனுமதிக்கக்கூடாது" என்று இங்கு நடைபெற்ற ஊடகச் சந்திப்பில் யோஹ் கூறினார்.

"எடுக்கப்பட்ட நடவடிக்கைகளுக்கு நீண்ட காலமாக வந்த பிரச்சினைகளைச் சரிசெய்ய உறுதியான முடிவுகள் தேவைப்பட்டாலும், மக்களின் நலன்களும், பாதுகாப்பும் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்" என்று அந்த செகாம்புட் நாடாளுமன்ற உறுப்பினர் மேலும் தெரிவித்தார்.

அந்த 17 மனைகளில், ஒன்று ஏற்கனவே மேம்படுத்தப்பட்டுள்ளது. அந்த மேம்படுத்தப்பட்ட மனையானது தேக்கக் குளங்களில் சேவைப் பணிகளுக்கு ஒரு தீவிரத் தடையாக மாறிவிட்டது என்று நகரத்தின் நீர்ப்பாசனம், வடிகால் துறையின் தொழில்நுட்ப மதிப்பீடு குறிப்பிட்டதாக யோஹ் கூறினார்.

கோலாலம்பூர் மாநகராட்சி (டி.பி.கே.எல்) அதன் பின்னர், மீதமுள்ள மனைகளுக்கான அனைத்து மேம்பாட்டு விண்ணப்பங்களையும் முழுமையாக நிறுத்த உத்தரவிட்டுள்ளது. மேலும், எந்தவொரு ஒப்புதலும், நகரத்தின் நீர்ப்பாசனம், வடிகால் துறையால் நிர்ணயிக்கப்பட்ட கடுமையான தேவைகளை மேம்பாட்டாளர்கள் பூர்த்தி செய்வதையே சார்ந்திருக்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

"சுற்றியுள்ள நிலம் மேம்படுத்தப்படக்கூடாது. கேஎல் ஏற்கனவே நிலத்திற்குப் பஞ்சமாக உள்ளது. மேலும் எங்களிடம் இன்னும் வெள்ளத் தேக்கக் குளங்கள் இல்லை" என்றார் அவர்.

அதே நேரத்தில், கூட்டாட்சிப் பகுதிகள் துறை, பிற நிறுவனங்களுடனான வெள்ளத் தணிப்பு முயற்சிகளில் ஒருங்கிணைப்பை வலுப்படுத்துவதற்காக ஒரு பணிக்குழுவை அமைத்துள்ளது.

"வெள்ளத் தேக்கக் குள நிலத்தில் அசல் செயல்பாடும், பராமரிப்பு அணுகலும் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்வதற்காக எந்தவொரு மேம்பாட்டு விண்ணப்பங்களுக்கும், நீர்ப்பாசனம், வடிகால் துறையால் நிர்ணயிக்கப்பட்ட மேம்பாட்டு நிபந்தனைகள் முழுமையாகப் பின்பற்றப்படும் வரை, டி.பி.கே.எல் திட்டமிடல் அனுமதிகளை வழங்காது," என்று ஹன்னா யோஹ் கூறினார்.

-சங்கீர்த்தனா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset