செய்திகள் மலேசியா
லங்காவியில் இருந்து புறப்பட்ட பயிற்சி விமானம் அவசரமாகத் தரையிறங்கியது: விமானத்திலிருந்த இருவரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்
புத்ராஜயா:
9M-HMJ என்ற பதிவு எண் கொண்ட DA-40 ரக பயிற்சி விமானம் ஒன்று, இன்று காலை லங்காவி, குவா பகுதிக்கு அருகே அவசரமாகத் தரையிறங்கியதை மலேசியாவின் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் (CAAM) உறுதிப்படுத்தியுள்ளது.
பயிற்சிக்காக, அந்த விமானம் காலை 9.54 மணிக்கு லங்காவி சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்டதாகவும், சுமார் 35 நிமிடங்களுக்குப் பிறகு கட்டுப்பாட்டு கோபுரத்துடனான அதன் தொடர்பு அறுப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்தச் சம்பவத்தில், விமானி உட்பட விமானத்தில் இருந்த இரண்டு நபர்களும் சிறிய காயங்களுடன் பாதுகாப்பாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து அமைச்சகத்தின் கீழ் உள்ள விமான விபத்துகள் புலனாய்வுப் பணியகம் (AAIB), 2016 ஆம் ஆண்டின் சிவில் விமானப் போக்குவரத்து ஒழுங்குமுறைகளுக்கு இணங்க, இந்தச் சம்பவத்திற்கான காரணம் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 12, 2026, 4:47 pm
வெள்ளத் தடுப்பு கட்டுமானங்களுக்கு முற்றுப்புள்ளி: அமைச்சர் ஹன்னா யோஹ்
May 12, 2026, 12:40 pm
