நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

லங்காவி போதைப்பொருள் கும்பலுக்கு போலிசார் மூளையாகச் செயல்படுவதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள்; விசாரணைகள் நடைபெறுகிறது: ஐஜிபி

கோலாலம்பூர்:

லங்காவி தீவில் போலிசாரே மூளையாகச் செயல்படுவதாக நம்பப்படும் ஒரு போதைப்பொருள் கடத்தல் கும்பல் வலையமைப்பு குறித்த குற்றச்சாட்டுகள் குறித்து அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

தேசிய போலிஸ்படைத் தலைவர் டத்தோஶ்ரீ காலித் இஸ்மாயில் இதனை கூறினார்.

அந்த குற்றச்சாட்டு இன்னும் விசாரணையில் உள்ளது. இதில் யார், எந்த நபர்கள் அல்லது எந்தக் குழுக்கள் ஈடுபட்டுள்ளன என்பதை நான் உறுதிப்படுத்த வேண்டும்.

எனவே, தற்போதைக்கு என்னால் முழுமையாக கருத்து தெரிவிக்க முடியாது.

குற்றச் செயல்களில் காவல்துறையினர் ஈடுபட்டிருந்தால், நாங்கள் நிச்சயமாக சமரசம் செய்துகொள்ள மாட்டோம்.

இந்த ஆண்டில் மட்டும், நாட்டின் பாதுகாப்பு எப்போதும் உறுதி செய்யப்படுவதை உறுதி செய்வதற்காக நாங்கள் பல பெரிய பறிமுதல்களைச் செய்துள்ளோம் என்று இங்கு நடைபெற்ற சிறப்பு போலிஸ் உரையாடலின் தொடக்க விழாவிற்குப் பிறகு அவர் கூறினார்.

நேர்மை, தரநிலைகள் இணக்கத் துறையின் கீழ் இந்த விசாரணையில் உள்ளக நடவடிக்கையும் உள்ளதா என்று கேட்டதற்கு, சட்ட விதிகளுக்கு இணங்க விசாரணை நடத்தப்படும்.

இது பாதுகாப்புச் சட்டங்கள்,  அதுபோன்றவற்றுடன் தொடர்புடையதாக இருந்தால், சட்ட நடவடிக்கை எடுக்க நாங்கள் தயங்க மாட்டோம் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset