செய்திகள் மலேசியா
பெட்டாலிங் மாவட்ட கால்பந்து சங்கத்தின் கால்பந்து போட்டி 90 அணிகள் களமிறங்கவுள்ளன: பத்துமலை
ஷாஆலம்:
பெட்டாலிங் மாவட்ட கால்பந்து சங்கத்தின் கால்பந்துப் போட்டியில் மொத்தம் 90 தமிழ்ப்பள்ளி அணிகள் களமிறங்கவுள்ளன.
அச்சங்கத்தின் தலைவர் பத்துமலை இதனை கூறினார்.
பெட்டாலிங் மாவட்ட கால்பந்து சங்கத்தினர் 22ஆம் ஆண்டாக சிலாங்கூர் மாநில தமிழ்ப் பள்ளிகளுக்கான கால்பந்துப் போட்டியை ஏற்பாடு செய்துள்ளனர்.
இக்கால்பந்து போட்டி வரும் ஜூன் 13ஆம் தேதி சுங்கைபூலோ ஆர்ஆர்ஐ திடலில் நடைபெறவுள்ளது.
இவ்வாண்டுப் போட்டியில் ஆண்கள் பிரிவில் 65 அணிகள் களமிறங்கவுள்ளனர்.
அதே போன்று பெண்கள் பிரிவில் 34 அணிகளும் களமிறங்கவுள்ளன.
ஆக மொத்தத்தில் 90 அணிகள் இப்போட்டியில் கலந்து கொள்ளவுள்ளன.
இன்று ஷாஆலம் சுங்கை ரெங்காம் தமிழ்ப்பள்ளி மண்டபத்தில் நடந்த போட்டிக்கான குலுக்கல் நிகழ்வுக்கு பின் பத்துமலை செய்தியாளர்களிடம் கூறினார்.
தமிழ்ப்பள்ளி மாணவர்கள் கால்பந்து விளையாட்டில் சாதிக்க வேண்டும் என்ற நோக்கில் இப்போட்டி ஒவ்வோர் ஆண்டும் மிகப்பெரிய அளவில் நடத்தப்பட்டு வருகிறது.
இந்த கால்பந்து போட்டியில் ஆணகள், பெண்கள் பிரிவில் வெற்றி பெறும் குழுக்களுக்கு ரொக்கப் பரிசுகள் காத்துக் கொண்டிருக்கிறது.
இதே போன்று தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர் மன்றத்தின் சார்பில் பரிசுகள் வழங்கப்படவுள்ளது.
பெட்டாலிங் ஜெயா மாவட்ட கால்பந்து சங்கத்தின் முன்னாள் செயலாளர் அமரர் நமச்சிவாயம் கிண்ணம் என்ற பெயரில் ஆண்களுக்கான போட்டி நடத்தப்படவுள்ளது.
பெண்கள் பிரிவுக்கான போட்டி முன்னாள் தலைவர் அமரர் ரவீந்திரன் கிண்ணம் என்ற பெயரில் நடத்தப்படுகிறது என்ற அவர் கூறினார்.
இன்று நடைபெற்ற குலுக்கல் நிகழ்வில் சிலாங்கூர் மாநில கால்பந்து சங்கத்தின் உதவித் தலைவர் டத்தோ சுகு, பெட்டாலிங் சங்கத்தின் துணை தலைவர் குணசேகரன், செயலாளர் குணசேகரன், பொருளாளர் இராமச்சந்திரன் உட்பட அனைத்து பொறுப்பாளர்கள் கலந்து சிறப்பித்தனர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
June 6, 2026, 9:38 pm
ஜொகூர், நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தல்களில் பெர்சமா கட்சி போட்டியிடும்: ரபிசி
June 6, 2026, 9:36 pm
கெடிலான் உதவித் தலைவர்களாக சைபுடின், ஜலேஹா நியமனம்
June 6, 2026, 6:10 pm
15 நாட்கள் மர்மமாக மாயம்: இறுதியில் உயிருடன் கண்டுபிடிக்கப்பட்ட ஜாஸ்லிண்டா
June 6, 2026, 5:12 pm
மீன்பிடிக்கச் சென்ற சிறுவர்களுக்கு அதிர்ச்சி: வடிகாலில் ஆடவரின் சடலம் கண்டெடுப்பு
June 6, 2026, 2:38 pm
மாராவின் திவேட் கல்வி திட்டம் கிட்டத்தட்ட 100 சதவீத வேலை வாய்ப்பை எட்டியுள்ளது: ஜாஹித்
June 6, 2026, 1:30 pm
