நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

40க்கும் மேற்பட்ட தனித்து வாழும் தாய்மார்களுடன் அன்னையர் தினம் கொண்டாடிய துணையமைச்சர் யுனேஸ்வரன்

பங்சார்:

அன்னையர் தினத்தை முன்னிட்டு, தேசிய ஒருமைப்பாட்டு துணையமைச்சர் யுனேஸ்வரன் ராமராஜ் தனது தலைமையில் ஏற்பாடு செய்திருந்த தனித்து வாழும் தாய்மார்களுடனான சிறப்பு மதிய உணவு நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் 40க்கும் மேற்பட்ட தனித்து வாழும் தாய்மார்கள் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் துணையமைச்சர் யுனேஸ்வரன் தனது தாயாருக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்க வாய்ப்பு கிடைத்ததாகவும், அதே நேரத்தில் தனித்து வாழும் தாய்மார்களுடன் ஓர் அர்த்தமுள்ள சந்திப்பில் பங்கேற்றதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், அவர் கித்தார் கருவியை வாசித்து பாடல்கள் பாடியது அங்கிருந்தவர்களைக் கவர்ந்தது.

தாய்மார்களின் வாழ்க்கை அனுபவங்கள், தியாகம், சவால்கள் குறித்து தாம் நேரடியாகக் கேட்டறிந்ததாகவும் தனது முகநூல் பதிவில் துணையமைச்சர் குறிப்பிட்டிருந்தார்.

தாய்மை என்பது வசதியால் அளவிடப்படுவதல்ல; அது தினமும் செய்யப்படும் தியாகமும், நிபந்தனையற்ற அன்பும் என அவர் குறிப்பிட்டார்.

குறிப்பாக வாழ்க்கையின் சவால்களைத் துணிச்சலுடன் எதிர்கொள்ளும் தனித் தாய்மார்கள் சமூகத்தின் உண்மையான வீராங்கனைகள் எனவும் அவர் தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த Chef Larissa Low, தமது குழுவினருக்கு அவர் நன்றியைத் தெரிவித்தார்.

- பார்த்திபன் நாகராஜன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset