செய்திகள் இந்தியா
ராஜஸ்தானில் வினாத்தாள்கள் கசிவு; இந்தியா முழுவதும் மே.3-இல் நடந்த நீட் தேர்வு ரத்து: தேசிய தேர்வு முகமை அறிவிப்பு
புதுடெல்லி:
வினாத்தாள் கசிந்த விவகாரத்தின் எதிரொலியாக இந்தியா முழுவதும் கடந்த மே 3-ம் தேதி நடத்தப்பட்ட நீட் தேர்வு ரத்து செய்யப்படுவதாகவும், மறு தேர்வு நடத்தப்படும் என்றும் தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.
மருத்துவ இளநிலை பட்டப்படிப்புக்கான நீட் தேர்வு கடந்த 3ம் தேதி நாடு முழுவதும் நடத்தப்பட்டது. எனினும், தேர்வுக்கு முன்பாக வினாத்தாள் கசிந்தது உறுதிப்படுத்தப்பட்டது.
இதையடுத்து நீட் தேர்வு ரத்து செய்யப்படுவதாக, தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.
மேலும், மாணவர்கள் நீட் மறு தேர்வுக்கு புதிதாக விண்ணப்பிக்க வேண்டாம், கட்டணம் செலுத்த வேண்டாம் என்றும் தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.
முன்னதாக, 2026- 27-ம் ஆண்டு எம்பிபிஎஸ் மாணவர் சேர்க்கைக்காக கடந்த மே 3-ம் தேதி நடத்தப்பட்ட நீட் தேர்வில் கேட்கப்பட்ட 200 வினாக்களில் 80%-க்கும் கூடுதலான வினாக்கள் தேர்வுக்கு பல நாள்கள் முன்பே பாஜக ஆளும் ராஜஸ்தானில் வெளியாகி விட்டதாகவும், இது தொடர்பாக அம்மாநில காவல்துறை வழக்குப் பதிவு செய்து விசாரிப்பதாகவும் செய்திகள் வெளியாகின.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
June 4, 2026, 10:07 pm
பிஹார் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர்
June 4, 2026, 12:55 pm
பாரம்பரியத்தை உடைத்து சவுதிக்கான இந்தியத் தூதராக முஸ்லிம் அல்லாதவரை நியமித்தது ஒன்றிய அரசு
June 3, 2026, 3:50 pm
டெல்லி உணவகத்தில் தீ விபத்து; 10 பேர் உயிரிழப்பு
May 30, 2026, 12:57 pm
2026 ஆம் ஆண்டில் 11 ஆண்டுகளில் மிகக் குறைந்த அளவிலான பருவமழையை இந்தியா எதிர்பார்க்கிறது
May 29, 2026, 9:52 am
இந்தியாவின் பிரபல உருது கவிஞர் பஷீர் பத்ர் 91 வயதில் காலமானார்
May 29, 2026, 8:34 am
கர்நாடாகாவின் முதல்வர் ஆகிறார் டி.கே.சிவக்குமார்
May 28, 2026, 8:23 pm
