செய்திகள் இந்தியா
திருமணத்துக்கு ரூ.17 கோடிக்கு அரண்மனை முன்பதிவு - வருங்கால கணவனை, காதலன் துணையோடு கொன்ற மணப்பெண்
மும்பை:
மகாராஷ்டிரா மாநிலம் புனேயை சேர்ந்த தொழிலதிபர் அகர்வால் மகன் கேதன் அகர்வாலுக்கும், ஷியா கோயல் என்ற பெண்ணிற்கும் இடையே வரும் நவம்பர் மாதம் திருமணத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
திருமணத்திற்கு முன்பு தம்பதியினர் அடிக்கடி வெளியிடங்களுக்கு சென்று வந்தனர். வழக்கம்போல் இருவரும் புனே அருகில் உள்ள லோஹாட் கோட்டைக்கு சென்றனர்.
அந்த கோட்டை மலை உச்சியில் இருக்கிறது. அந்த கோட்டைக்கு செல்ல வேண்டும் என்று கட்டாயப்படுத்தி ஷியா கோயல் தனது வருங்கால கணவனை அழைத்துச்சென்றார்.
அங்கு அவர்கள் மலையேற்றத்தில் ஈடுபட்டனர். மலை உச்சியில் இருந்து கோட்டையில் இருந்தபோது கடுமையாக வீசிய காற்று காரணமாக கேதன் தவறி 400 அடி பள்ளத்தில் விழுந்துவிட்டதாக ஷியா போலீஸில் தெரிவித்தார்.
3 நாட்கள் போராடி கேதன் உடல் பள்ளத்தில் இருந்து எடுக்கப்பட்டது.
இச்சம்பவம் குறித்து ஷியா சொன்ன வாக்குமூலம் போலீஸாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.
போலீஸார் நடத்திய விசாரணையில் ஷியா, கேதன் இருந்த இடத்தில் ஷியாவுடன் வேலை செய்யும் சேதன் என்பவரும் உடன் இருந்தது மொபைல் போன் சிக்னல் மூலம் தெரிய வந்தது.
அதோடு ஷியாவும், சேதனும் அடிக்கடி போனில் பேசி இருப்பதும், அவர்கள் இருவரும் காதலிப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.
ஆரம்பத்தில் ஷியாவிற்கு விருப்பம் இல்லாவிட்டாலும், பணக்கார மணமகன் என்பதால் இத் திருமணத்திற்கு சம்மதித்தார்.
ஆனாலும் அதனை ஏற்றுக்கொள்ள முடியாமல் கட்டாயப்படுத்தி கேதனை ஷியா மலைப்பகுதிக்கு கட்டாயப்படுத்தி அழைத்து சென்று மேலிருந்து காதலனுடன் சேர்ந்து கேதனை கீழே தள்ளி கொலை செய்துள்ளனர் என்று போலீஸார் தெரிவித்தனர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
August 25, 2026, 3:49 pm
ஈரானுடன் வர்த்தக உறவு: 4 இந்திய நிறுவனங்களுக்கு அமெரிக்கா தடை
August 24, 2026, 4:35 pm
கொல்கத்தாவில் ஷோரூமில் பயங்கர தீ விபத்து: 22 புதிய கார்கள் எரிந்து நாசம்
August 22, 2026, 6:05 pm
மராத்தி மொழி தெரியாத 1,268 ஆட்டோ - டாக்சி ஓட்டுநர்களுக்கு எதிராக மகாராஷ்டிர அரசு நடவடிக்கை
August 21, 2026, 9:37 pm
மோசடித் தளங்களை நீக்கும்படி Googleக்கு இந்திய அரசு உத்தரவு
August 21, 2026, 10:14 am
சா்க்கரை இருப்பு வைக்கக்கூடாது: இந்திய அரசு அறிவிப்பு
August 20, 2026, 9:09 pm
சீன ஆக்கிரமிப்பு பற்றி ஒன்றிய அரசு விளக்கம் அளிக்காதது ஏன்?: காங்கிரஸ் தலைவர் கார்கே கேள்வி
August 19, 2026, 6:45 pm
அரசுப் பள்ளி உணவில் உப்புக்கு பதில் டிடர்ஜென்ட் பவுடர் கலந்ததால் 34 மாணவ, மாணவிகள் பாதிப்பு
August 18, 2026, 1:14 pm
பாஜக தேசிய மகளிா் அணி தலைவா் பதவியில் இருந்து வானதி சீனிவாசன் நீக்கம்
August 17, 2026, 4:43 pm
பிரதமர் மோடிக்காக 1,100 ராகிகளைத் தயாரித்த பிருந்தாவன் விதவைகள்
August 15, 2026, 1:12 pm
