செய்திகள் இந்தியா
இந்தியாவில் நீட் தேர்வு வினாத்தாள்கள் கசியாமல் இருக்க டெலிகிராம் செயலிக்கு தற்காலிக தடை: வினாத்தாள் தயாரிப்பில் ஈடுபட்ட அனைத்துப் பணியாளர்கள் தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர்
புதுடெல்லி:
கடந்த நீட் தேர்வின் போது ஒரு கும்பல் டெலிகிராம் செயலியைப் பயன்படுத்தி வினாத்தாள்களைக் கசியவிட்டது விசாரணையில் தெரிய வந்துள்ளது. மீண்டும் அதுபோல் ஒரு சம்பவம் நிகழ்வதைத் தடுக்க, ஜூன் 22ம் தேதி வரை இந்தியாவில் டெலிகிராம் செயலிக்கு இந்திய அரசு தற்காலிகமாகத் தடை விதித்துள்ளது.
ஜூன் 21-ம் தேதி நீட் மறுதேர்வை எந்தப் புகாரும் இல்லாமல் நடத்த தேசிய தேர்வு முகமை (என்டிஏ) தயாராகி வருகிறது. வினாத்தாள் கசிவதைத் தடுக்கவும், நீட் தேர்வு செயல்முறையின் மீது மீண்டும் நம்பிக்கையை ஏற்படுத்தவும் இதுவரை இல்லாத அளவில் பாதுகாப்பு ஏற்பாடுகளை என்டிஏ அறிமுகப்படுத்தி உள்ளது.
இம்முறை டெலிகிராம் செயலிக்கு தடை, வினாத்தாள்களைக் கொண்டு செல்ல இந்திய விமானப் படை சேவையைப் பயன்படுத்தப்படுகிறது
நீட் வினாத்தாள் தயாரிப்பில் ஈடுபட்ட அனைத்துப் பணியாளர்களும் ஜூன் 21-ம் தேதி வரை தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர். அவர்களை யாரும் தொடர்பு கொள்ள முடியாதபடி ரகசிய இடத்தில் தங்க வைக்கப்பட்டு, கண்காணிப்பில் உள்ளனர்.
அவர்கள் செல்போன், லேப்டாப், தனிப்பட்ட தகவல் தொடர்பு சாதனங்களைப் பயன்படுத்த அனுமதி இல்லை. இணைய வசதி, வெளி உலகத் தொடர்புகள் கடும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன.
நீட் வினாத்தாள்களைப் பாதுகாப்பாகக் கொண்டு செல்வதற்காக, முதல் முறையாக இந்திய விமானப் படை (ஐஏஎப்) ஈடுபடுத்தப்பட உள்ளது. மத்திய உள்துறை அமைச்சகத்தின் ஜூன் 7 தேதியிட்ட உத்தரவின்படி, வினாத்தாள்கள் அதன் உற்பத்தி மையங்களில் இருந்து புறப்பட்டது முதல் பயணம் முழுவதும் மாநில போலீஸாரின் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்படும்.
மேலும், ஹைதராபாத், அகமதாபாத் ஆகிய முதன்மை மையங்களில் இருந்து தேர்வு நடத்தப்படும் 551 நகரங்களின் மையங்கள் வரையிலான ஒட்டுமொத்த பயணத்திலும் சிஐஎஸ்எஃப், சிஆர்பிஎஃப் வீரர்கள் தீவிரமாகப் பாதுகாப்பார்கள். இவ்விரு படைகளும் தங்களின் சிறப்புப் பிரிவு வீரர்களை இதற்காக வழங்கியுள்ளன.
தேர்வு செயல்முறை முழுவதும் தொடர்ச்சியான கண்காணிப்பை உறுதி செய்ய, என்டிஏ பல அடுக்கு பாதுகாப்பு உள்கட்டமைப்பை உருவாக்கியுள்ளது. தேர்வு மையங்கள் முழுவதும் 5 லட்சத்துக்கும் அதிகமான பாதுகாப்புப் பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டு வருகின்றனர்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
September 23, 2026, 3:13 pm
பிகாரில் கொட்டித்தீர்த்த கனமழை: 50 லட்சம் மக்கள் வெள்ளத்தால் பாதிப்பு
September 21, 2026, 10:20 pm
2030-க்குள் மணிக்கு 350 கி.மீ. வேகத்தில் செல்லும் ‘சுதேசி’ புல்லட் ரயில் தயாரிக்க இந்திய அரசு இலக்கு
September 16, 2026, 12:22 pm
இந்தியாவின் வட மாநிலங்களில் கடும் வெள்ளம்: 20 பேர் மாண்டனர்
September 14, 2026, 11:27 pm
மே.வங்கத்தில் 252 மதரஸாக்கள் மூட மாநில பாஜக அரசு உத்தரவு: மேலும் 100 கல்வி நிறுவனங்களுக்கு நோட்டீஸ்
September 12, 2026, 10:40 pm
பிரிக்ஸ் விருந்தினர்களுக்கு பிஹாரின் பிரபல உணவு வகை
September 10, 2026, 1:02 pm
பிரிக்ஸ் மாநாடு: புதின், ஷி ஜின்பிங், அன்வார் இப்ராஹிம் பங்கேற்கின்றனா்
September 7, 2026, 9:32 pm
