நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தமிழக முதல்வர் விஜய்க்கு தேசியக் கூட்டணி வாழ்த்து

கோலாலம்பூர்:

தமிழக தேர்தலில் வெற்றி பெற்றதற்கும் முதலமைச்சராக பதவியேற்றதற்கும் சி.ஜோசப் விஜய், அவரது கட்சியான தமிழக வெற்றி கழகத்திற்கு தேசியக் கூட்டணி வாழ்த்து தெரிவித்துள்ளது.

தேசியக் கூட்டணி பொதுச்செயலாளர் டத்தோஶ்ரீ தக்கியூடின் ஹசான் இதனை  கூறினார்.

நீதி, சமூக நல்லிணக்கம், இளைஞர் மேம்பாடு, நவீனமயமாக்கல்,  பிளவுபடுத்தும், பாகுபாடு காட்டும் அரசியலை நிராகரித்தல் ஆகியவற்றை வலியுறுத்தும் விஜய்யின் சீர்திருத்தத் திட்டத்தின் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை இந்த வெற்றி பிரதிபலிக்கிறது.

முன்னாள் நடிகர் என்ற அவரது பின்னணி,  அவரது மனிதாபிமான முயற்சிகள் காரணமாக மலேசியாவில் குறிப்பாக இந்திய இளைஞர்கள் மத்தியில் விஜய்க்கு பெரும் செல்வாக்கு உள்ளது.

அவரது அரசியல் எழுச்சியைப் பலரும் மிகுந்த ஆர்வத்துடனும் உற்சாகத்துடனும் கவனித்து வருகின்றனர்.

தமிழ்நாட்டிற்கும் இந்திய வம்சாவளி மலேசியர்களுக்கும் இடையே உள்ள நீண்டகால வரலாற்று, கலாச்சார, மொழி ரீதியான உறவுகளைக் கருத்தில் கொள்ளும்போது இது முக்கியத்துவம் பெறுகிறது.

தமிழ்நாட்டை மேலும் முன்னேற்றம், நிலைத்தன்மை, செழிப்பை நோக்கி வழிநடத்துவதில் அவர் வெற்றி பெற தேசியக் கூட்டணி வாழ்த்துகிறது என்று அது ஒரு அறிக்கையில் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset