செய்திகள் மலேசியா
கெடா நீச்சல் சாம்பியன் போட்டியில் அதிக பதக்கங்களை வென்று லாவ்னேஷ் கமலேஷ்வரன் ஆதிக்கம் செலுத்தினார்
அலோர்ஸ்டார்:
கெடா பொது நீச்சல் சாம்பியன் போட்டியில் அதிக பதக்கங்களை வென்று லாவ்னேஷ் கமலேஷ்வரன் ஆதிக்கம் செலுத்தினார்.
கெடா பொது நீச்சல் சாம்பிய போட்டி கடந்த 8, 9ஆம் தேதிகளில் குனூங் கெரியாங் நீச்சல் குள அரங்கில் நடைபெற்றது.
இபோட்டியில் அதிகமான போட்டியாளர்கள் கலந்து கொண்டு தங்களின் திறனை வெளிப்படுத்தினர்.
இதில் லாவ்னேஷ் மலேஷ்வரன் குரூப் 1 (16–18 வயது) பிரிவில் மறுக்கமுடியாத நட்சத்திரமாக உருவெடுத்தார்.
அபாரமான பதக்கக் குவியல், சாதனை அளவிலான செயல் திறன்களுடன் சிறந்த ஆண் நீச்சல் வீரர் விருதை வென்றார்.
டி'ஸ்பிளாஷ் நீச்சல் பயிற்சி மையத்தைப் பிரதிநிதித்துவப்படுத்திய லாவ்னேஷ், ஸ்பிரிண்ட் உட்பட போட்டிகள் முழுவதும் ஆதிக்கம் செலுத்தி குறிப்பிடத்தக்க பன்முகத்தன்மை, நிலைத்தன்மையை வெளிப்படுத்தினார்.
மேலும் லாவ்னேஷ் கமலேஷ்வரன் 9 தங்கம் உட்பட 13 பதக்கங்களை வென்று, மிகவும் புகழ்பெற்ற நீச்சல் வீரராக போட்டியை நிறைவு செய்தார்.
இதே போன்று அபிநேயா மோகனதாஸ், வரிஸ்மான் பாஸ்கரன், தான்யா சசீ, லெட்சுமி நாயர் அர்ஜுணன், ஜனனி நாயர் அர்ஜுணன், ஆர்த்திவாரா போங்சகூன் ஆகியோரும் அதிகமான பதக்கங்களை வென்று சாதித்துள்ளனர்.
இப்போட்டியாளர்களின் வெற்றி, மலேசிய நீச்சலில் இந்தியப் பிரதிநிதித்துவத்தை முன்னிலைப்படுத்தி அடுத்த தலைமுறை விளையாட்டு வீரர்களுக்கு உத்வேகம் அளிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 11, 2026, 5:07 pm
தமிழக முதல்வர் விஜய்க்கு தேசியக் கூட்டணி வாழ்த்து
May 11, 2026, 5:04 pm
ஜொகூர் மாநிலத் தேர்தல் நாளை நடைபெறாது: ஜாஹித்
May 11, 2026, 5:03 pm
என்கேவிஇ நெடுஞ்சாலையில் விபத்து: இன்ஸ்பிரா கார் ஓட்டுநர் கைது
May 11, 2026, 1:43 pm
