நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பிரதமராவது என்பது எனது வாழ்நாள் லட்சியம் அல்ல: கைரி

கோலாலம்பூர்:

தனக்கு இன்னும் பிரதமராகும் லட்சியம் இருந்தாலும் அது எனது வாழ்நாள் லட்சியம் அல்ல.

அந்த விஷயத்தில் இப்போது அதிக ஈடுபாடு இல்லை என்று முன்னாள் சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுடின் கூறினார்.

அரசியலில் இருந்து மூன்று ஆண்டுகள் விலகியிருந்தது இந்த விஷயத்தில் தனது பார்வையை மாற்றியுள்ளது.

அரசியலில் ஒரு தலைவராக இருப்பது எப்போதுமே எனது லட்சியமாக இருந்துள்ளது.

மேலும் பிரதமர் பதவி தான் சிறந்த பதவி, ஏனென்றால் நம்மால் அதிக விஷயங்களைச் செய்ய முடியும் மற்றும் அதிக மக்களுக்கு உதவ முடியும்.

நான் பிரதமராகவில்லை என்றால், வாழ்க்கையில் வெற்றி பெற்றவராகக் கருதப்பட மாட்டேன் என்று நான் உணர்ந்ததுண்டு. 

இப்போது நான் பிரதமராகவில்லை என்றால் அது சரி என்று நான் நினைக்கவில்லை.

நான் என்னை ஒரு தோல்வியாளராகக் கருத மாட்டேன். ஒரு மனிதனாக எனக்கு இன்னும் மதிப்பு இருக்கிறது என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset