செய்திகள் மலேசியா
வரலாற்றில் முதல் முறையாக டத்தோஶ்ரீ ரமணன் மித்ரா ஒதுக்கீட்டை 150 மில்லியன் ரிங்கிட்டாக வெற்றிகரமாக உயர்த்தினார்: பிரதமருக்கு நன்றி
கோலாலம்பூர்:
பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையில் மலாயா பல்கலைக்கழகத்தின் துங்கு வேந்தர் அரங்கில் நடைபெற்ற மலேசிய இந்திய மாணவர்களுடனான சந்திப்பு சிறப்பான முறையில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் நாடு தழுவிய அளவில் 3,000 இந்திய மாணவர்களுக்குப் பயனளிக்கும் புதிய மடிகணினி வங்கும் திட்டத்தோடு தொடங்கியது.
இந்த முயற்சி, சமூகத்தின் அனைத்துத் தரப்பினருக்கும் இலக்க்கவியல் கல்விக்கான நியாயமான, சமமான அணுகலை உறுதி செய்வதில் மடானி அரசாங்கத்தின் அர்ப்பணிப்பைப் பிரதிபலிக்கிறது.
அதே நிகழ்வில் அங்கீகரிக்கப்பட்ட பொது உயர்கல்வி நிறுவனங்கள், தனியார் உயர் கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த 4,165 மாணவர்களுக்கு, மொத்தம் 8.347 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீட்டில் உதவித் தொகைக் காசோலைகளும் வழங்கப்பட்டன.
நாட்டில் உள்ள இந்திய சமூகத்தினருக்காக பல்வேறு சமூக, பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்களைச் செயல்படுத்தியதற்காக, மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன், மித்ராவின் தலைமை இயக்குநர் ரவீந்திரன் நாயர் ஆகியோர் தலைமையிலான மித்ராவிற்கு பிரதமர் தனது பாராட்டைத் தெரிவித்தார்.
மேலும் சமூகத்தின் ஒட்டுமொத்த சமூக-பொருளாதார நிலையை மேம்படுத்தும் பொருட்டு, கல்வி, திறன் மேம்பாடு, தொழில்முனைவு, சமூக நலன் ஆகியவற்றை வலுப்படுத்துவதற்கான மடானி அரசாங்கத்தின் தொடர்ச்சியான முயற்சிகளின் ஒரு பகுதியாகவே செயல்படுத்தப்பட்ட அனைத்து முன்னெடுப்புகளும் உள்ளன.
வழங்கப்படும் உதவி என்பது வெறும் நிதி உதவி மட்டுமல். மாறாக, பெருகிவரும் போட்டி நிறைந்த உலகில் உயர்கல்விக்கான நியாயமான அணுகலையும் வெற்றிக்கான வாய்ப்புகளையும் திறப்பதோடு,
எந்தவொரு இளைஞரும் தங்கள் படிப்பைத் தொடரும் வாய்ப்பை இழக்காமல் இருப்பதை உறுதி செய்வதற்காக நாடு செய்யும் ஒரு முக்கிய முதலீடு என்று பிரதமர் வலியுறுத்தினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 11, 2026, 5:07 pm
தமிழக முதல்வர் விஜய்க்கு தேசியக் கூட்டணி வாழ்த்து
May 11, 2026, 5:04 pm
ஜொகூர் மாநிலத் தேர்தல் நாளை நடைபெறாது: ஜாஹித்
May 11, 2026, 5:03 pm
என்கேவிஇ நெடுஞ்சாலையில் விபத்து: இன்ஸ்பிரா கார் ஓட்டுநர் கைது
May 11, 2026, 1:43 pm
