செய்திகள் மலேசியா
என்கேவிஇ நெடுஞ்சாலையில் விபத்து: இன்ஸ்பிரா கார் ஓட்டுநர் கைது
கோலாலம்பூர்:
ஜாலான் டூத்தா டோல் சாவடியை நோக்கிச் செல்லும் புதிய கிள்ளான் பள்ளத்தாக்கு நெடுஞ்சாலையின் (என்கேவிஇ) 28ஆவது கிலோமீட்டர் பகுதியில் மூன்று வாகனங்கள் சம்பந்தப்பட்ட விபத்திற்குக் காரணம் என நம்பப்படும் ஒருவரை போலிஸ் கைது செய்துள்ளது.
கோலாலம்பூர் போக்குவரத்து புலனாய்வு, அமலாக்கத் துறையின் தலைவர் முகமது சம்சுரி இதனை கூறினார்.
மேலதிக விசாரணை மேற்கொள்ளப்படுவதற்கு முன்பு, சமூக ஊடகங்களில் வைரலான இந்தச் சம்பவத்தின் காணொளிப் பதிவைத் தனது குழு கண்டறிந்து.
இரவு சுமார் 11 மணியளவில் நடந்த இந்தச் சம்பவத்தில் ஒரு புரோட்டான் இன்ஸ்பிரா, ஒரு புரோட்டான் வீரா, ஒரு டொயோட்டா ஹைலேக்ஸ் ஆகியவை சம்பந்தப்பட்டுள்ளன.
முதற்கட்ட விசாரணையில் 26 வயது உள்ளூர் நபர் ஓட்டி வந்த புரோட்டான் இன்ஸ்பிரா வாகனம், நெடுஞ்சாலையின் வலதுபுறப் பாதையில் சறுக்கி நின்றதாக நம்பப்படுகிறது.
பின்னர் 40 வயது இந்தோனேசியர் ஓட்டி வந்த புரோட்டான் வீரா வாகனம் அந்த வாகனத்தின் மீது மோதியது.
அதனைத் தொடர்ந்து 41 வயது உள்ளூர் நபர் ஓட்டி வந்த டொயோட்டா ஹைலேக்ஸ் வாகனமும் புரோட்டான் இன்ஸ்பிரா மீது மோதியது என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
இந்த மோதலின் விளைவாக புரோட்டான் இன்ஸ்பிரா, டொயோட்டா ஹைலேக்ஸ் வாகனங்கள் சாலையின் இடதுபுறமாகச் சறுக்கிச் சென்று, ஒரு சாலைத் தடுப்பில் மோதியதாக அவர் கூறினார்.
இருப்பினும், ஓட்டுநர்கள் யாருக்கும் எந்தக் காயமும் ஏற்படவில்லை என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 11, 2026, 5:07 pm
தமிழக முதல்வர் விஜய்க்கு தேசியக் கூட்டணி வாழ்த்து
May 11, 2026, 5:04 pm
ஜொகூர் மாநிலத் தேர்தல் நாளை நடைபெறாது: ஜாஹித்
May 11, 2026, 1:43 pm
