செய்திகள் மலேசியா
ஜொகூர் மாநிலத் தேர்தல் நாளை நடைபெறாது: ஜாஹித்
ஜொகூர்பாரு:
ஜொகூர் மாநிலத் தேர்தல் உடனே நாளை நடைபெறாது என்று துணைப் பிரதமரும் அம்னோ தலைவருமான டத்தோஶ்ரீ ஜாஹித் ஹமிடி கூறினார்.
ஜொகூர் மாநிலத் தேர்தல் குறித்த விவாதங்கள் தற்போது பரவலாகி வருகிறது.
மாட்சிமைத் தங்கிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிம், ஜொகூர் மாநில இடைக்கால சுல்தான் துங்கு இஸ்மாயில் ஆகியோரின் ஒப்புதலைப் பெற்ற பின்னரே நடைபெறும்.
மலாக்கா மாநிலத் தேர்தலுக்கு முன்னதாக ஜொகூர் மாநிலத் தேர்தல் நடத்தப்படுமா என்பது குறித்தும், ஜொகூர் மந்திரி புசார் டத்தோ ஒன் ஹபிஸ் காஸியுடன் விவாதிக்கப்படும்.
இன்று இங்குள்ள ஜொகூர் அம்னோ மாநிலத் தொடர்பு அலுவலகத்தில் நடைபெற்ற அம்னோ உச்ச செயற்குழுக் கூட்டத்திற்குப் பிறகு நடந்த செய்தியாளர் சந்திப்பின்போது அவர் இவ்வாறு கூறினார்.
ஒன்றரை மணி நேரம் நீடித்த அம்னோ கூட்டம் குறித்துக் கருத்து தெரிவித்த அஹ்மத் ஜாஹித், அது பல்வேறு தேசியப் பிரச்சினைகளைப் பற்றி விவாதிப்பதற்கான ஒரு சாதாரணக் கூட்டம்.
ஜொகூர் மாநிலத் தேர்தல் பற்றியது அல்ல. பல பெரிய தேசியப் பிரச்சினைகள் உள்ளன.
ஆனால் உண்மையாகச் சொல்வதானால், இது ஒரு சாதாரணக் கூட்டம் மட்டுமே என்பதை நான் கூற விரும்புகிறேன் என்றார் அவர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 11, 2026, 5:07 pm
தமிழக முதல்வர் விஜய்க்கு தேசியக் கூட்டணி வாழ்த்து
May 11, 2026, 5:03 pm
என்கேவிஇ நெடுஞ்சாலையில் விபத்து: இன்ஸ்பிரா கார் ஓட்டுநர் கைது
May 11, 2026, 1:43 pm
