செய்திகள் மலேசியா
வீடுகள் மீது பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டதால் நான்கு குடும்பங்கள் அச்சத்தில் வாழ்கின்றனர்
ஜொகூர்பாரு:
வீடுகள் மீது பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டதால் நான்கு குடும்பங்கள் தொடர்ந்து அச்சத்தில் வாழ்ந்து வருகின்றனர்.
ஜொகூர்பாரு புக்கிட் இந்தாவில் வசிக்கும் நான்கு குடும்பங்கள், கடந்த வாரம் தொடர்ச்சியாக இரண்டு நாட்களாக ஒரு கொள்ளைக் கும்பலால் தங்கள் வீடுகள் மீது பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டதால் தற்போது அச்சத்தில் வாழ்ந்து வருகின்றனர்.
இந்த நிகழ்வைத் தனது முகநூல் கணக்கு மூலம் பகிர்ந்துகொண்ட பெர்லிங் மாநில சட்டமன்ற உறுப்பினர் லியூ சின் டோங்,
கடந்த வெள்ளிக்கிழமை நடந்த இந்தச் சம்பவத்தை சிங்கப்பூரைச் சேர்ந்த ஒரு கொள்ளைக் கும்பல்தான் திட்டமிட்டு நடத்தியது என்பதை மறுக்கவில்லை.
பெட்ரோல் குண்டு ஒரு வீட்டைக் குறிவைத்து வீசப்பட்டதாக நம்பப்படுகிறது.
ஆனால் அந்தத் தீ பாதிக்கப்பட்டவரின் அருகிலுள்ள மூன்று வீடுகளுக்கும் பரவி தீவிபத்தை ஏற்படுத்தியதாகவும், அடுத்த நாளும் இதே சம்பவம் மீண்டும் நடந்ததாகவும் அவர் கூறினார்.
குற்றவாளிகள் முந்தைய நாள் இதே செயலைச் செய்த பிறகு, இந்த வன்முறைக் குற்றம் மே 9 அன்று இரண்டாவது முறையாக நிகழ்த்தப்பட்டுள்ளது.
இந்தக் குற்றத்தின் பின்னணியில் உள்ள சூத்திரதாரி சிங்கப்பூர் கொள்ளைக் கும்பல் என்று நம்பப்படுகிறது என்று அவர் கூறினார்.
வீட்டின் முன் பகுதியை தவிர, பாதிக்கப்பட்டவருக்குச் சொந்தமான பல கார்களும் தீயில் எரிந்து நாசமாயின.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, உள்ளூர்வாசிகள் முன்முயற்சி எடுத்து பாதுகாப்புக் குழு வசதிகளை அமைத்ததுடன், பாதிக்கப்பட்டவர்களுக்கு நல உதவிகளையும் விநியோகித்ததாக சின் டோங் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 11, 2026, 5:07 pm
தமிழக முதல்வர் விஜய்க்கு தேசியக் கூட்டணி வாழ்த்து
May 11, 2026, 5:04 pm
ஜொகூர் மாநிலத் தேர்தல் நாளை நடைபெறாது: ஜாஹித்
May 11, 2026, 5:03 pm
என்கேவிஇ நெடுஞ்சாலையில் விபத்து: இன்ஸ்பிரா கார் ஓட்டுநர் கைது
May 11, 2026, 1:43 pm
