செய்திகள் மலேசியா
மலேசியாவில் ஊழல் பிரச்சினை இன்னும் தீவிரமாக உள்ளது; 6 ஆண்டுகளில் மட்டும் 277 பில்லியன் ரிங்கிட் இழப்பு ஏற்பட்டுள்ளது: அஸாம் பாக்கி
புத்ராஜெயா:
பல முக்கியப் பிரமுகர்கள் மீதான வழக்குகள் வெற்றிகரமாக நீதியின் முன் நிறுத்தப்பட்ட போதிலும், மலேசியாவில் ஊழல் பிரச்சினை இன்னும் தீவிரமாகவே உள்ளது.
மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமை ஆணையர் டான்ஸ்ரீ அஸாம் பாக்கி இதனை ஒப்புக்கொண்டார்.
ஆறு ஆண்டுகளில் கசிவுகளால் ஏற்பட்ட இழப்புகள் 277 பில்லியன் ரிங்கிட்டை எட்டியுள்ளது.
ஊழல் பிரச்சினை இன்னும் ஒரு அமைப்பு சார்ந்த பிரச்சினையாகவே கருதப்படுகிறது.
இதை பலமுறை கூறியுள்ளேன். இது ஒரு அமைப்பு சார்ந்த பிரச்சினை என்பது அனைவருக்கும் தெரியும். எனவே, இந்த அமைப்பு சார்ந்த விஷயத்தை நாம் ஒழிக்க வேண்டும். அதை நாம் நிர்வகிக்க வேண்டும்.
தேசியப் பண இழப்பு தொடர்பான கொள்முதல் முறையை ஒரு உதாரணமாக எடுத்துக் கொண்டால், ஆறு ஆண்டுகளுக்கு முன்பு 277 பில்லியன் ரிங்கிட் இழப்பு ஏற்பட்டது என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 11, 2026, 5:07 pm
தமிழக முதல்வர் விஜய்க்கு தேசியக் கூட்டணி வாழ்த்து
May 11, 2026, 5:04 pm
ஜொகூர் மாநிலத் தேர்தல் நாளை நடைபெறாது: ஜாஹித்
May 11, 2026, 5:03 pm
என்கேவிஇ நெடுஞ்சாலையில் விபத்து: இன்ஸ்பிரா கார் ஓட்டுநர் கைது
May 11, 2026, 1:43 pm
