நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மித்ராவிற்கு 150 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு; இந்திய சமூகத்தின் மேம்பாட்டிற்கான மடானி அரசாங்கத்தின் அர்ப்பணிப்பை காட்டுகிறது: குணராஜ்

செந்தோசா:

மித்ராவிற்கு 150 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு செய்யப்பட்டது இந்திய சமூகத்தின் மேம்பாட்டிற்கான மடானி அரசாங்கத்தின் அர்ப்பணிப்பை காட்டுகிறது என்று செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் குணராஜ் கூறினார்.

மித்ரா நிதி ஒதுக்கீட்டை 150 மில்லியன் ரிங்கிட்டாக உயர்த்தியிருப்பதாக அறிவித்த பிரதமர் டத்தோஸ்ரீ அன்வர் இப்ராஹிமிற்கு எனது மனமார்ந்த பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த அறிவிப்பு, இந்த நாட்டில் உள்ள இந்திய சமூகத்திற்கு ஒரு வரலாற்றுத் தருணமாகும். 

ஏனெனில் மித்ரா நிறுவப்பட்டதிலிருந்து, அது செடிக் என்று அழைக்கப்பட்ட காலத்தையும் சேர்த்து, அதன் ஆண்டு நிதி ஒதுக்கீடு ஒருபோதும் அதிகரிக்கப்படவில்லை.

இருபது ஆண்டுகளுக்கும் மேலாக இது சுமார் 100 மில்லியன் ரிங்கிட்டாகவே இருந்து வந்துள்ளது.

இந்தக் கூடுதல் 50 மில்லியன் ரிங்கிட் நிதி உயர்வு பிரதமரின் தலைமையிலான மடானி அரசாங்கம், மலேசியாவில் உள்ள இந்திய சமூகத்தின் சமூக பொருளாதார மேம்பாட்டில் எப்போதும் அக்கறையுடனும் அர்ப்பணிப்புடனும் உள்ளது என்பதை நிரூபிக்கிறது.

இந்த நிதி ஒதுக்கீட்டு உயர்வின் மூலம் கல்வி, திறன் பயிற்சி, தொழில்முனைவோர் மேம்பாடு, சமூக நலன், இளைஞர், மகளிர் மேம்பாடு, ஒட்டுமொத்த சமூக மேம்பாடு ஆகிய துறைகளில் மேலும் பல திட்டங்களை செயல்படுத்த முடியும்.
இந்திய சமூகத்தின் குரல்களையும் தேவைகளையும் அரசாங்கத்தின் உயர்மட்டத்திற்குக் கொண்டு செல்வதில் தொடர்ந்து ஈடுபட்டுவரும் மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணனுக்கு எனது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

முழு நம்பிக்கையுடனும் ஒற்றுமை உணர்வுடனும் நாம் முன்னோக்கிச் செல்ல வேண்டிய தருணம் இது. பிரதமரின் தலைமைக்கு நாம் தொடர்ந்து ஆதரவளிப்போம். 

ஏனெனில், அவர் இந்த நாட்டில் உள்ள இந்திய சமூகத்திற்கு வளர்ச்சியையும், வாய்ப்புகளையும், புதிய நம்பிக்கையையும் தொடர்ந்து கொண்டு வருவார் என்று குணராஜ் நம்பிக்கை தெரிவித்தார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset