செய்திகள் மலேசியா
தியாகப்பெருநாள் கொண்டாட்டத்திற்கு பிரதமர் அன்வார் தனது சொந்த ஊரில் குர்பானி பிராணிகளை ஒப்படைத்தார்
ஜார்ஜ் டவுன்:
ஈதுல் அத்ஹா - தியாகப்பெருநாள் கொண்டாட்டத்தை முன்னிட்டு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று பினாங்கில் உள்ள தனது சொந்த ஊருக்கு வருகை தந்துள்ளார். தனது சொந்த ஊரில் குர்பானி பிராணிகளை ஒப்படைத்தார்
நிதியமைச்சராக இருக்கும் அன்வார், பிற்பகல் 2 மணிக்கு செபராங் பெராய் தெங்கா மாவட்ட பள்ளிவாசலில் பெர்மாடாங் பாவ் நாடாளுமன்றம், செபராங் ஜெயா மாநிலத் தொகுதிகளில் உள்ள சமூகங்களுக்கு குர்பானிக்காக ஆடுகளையும் மாடுகளையும் வழங்கினார்.
முன்னதாக அவர் புக்கிட் மெர்தஜாம் பகுதி மக்களுக்கும் குர்பானி பிராணிகளை வழங்கினார்.
முன்னாள் பெர்மாடாங் பாவ் எம்.பி., பெங்கலன் தம்பாங்கில் உள்ள மஸ்ஜித் அல்-ஃபாலாவில் உள்ள பெர்மாடாங் பாசிர் தொகுதி சமூகத்திற்கு குர்பானி பிராணிகளை வழங்குவதற்காக அவர் தனது கிராமத்திற்குத் திரும்பினார்.
அன்வார் தலைநகருக்குப் புறப்படுவதற்கு முன் பிற்பகல் 3.45 மணிக்கு குபாங் செமாங்கின் படாங் மெங்குவாங் டிட்டியில் பெனாண்டி தொகுதி சமூகத்திற்கு குர்பானி பிராணிகளை வழங்குவதன் மூலம் பயணத்தை முடிப்பார்.
மலேசியாவில் உள்ள இஸ்லாமியர்கள் நாளை ஹஜ்ஜுப்பெருநாள் கொண்டாடுகிறார்கள்.
- பெர்னாமா
தொடர்புடைய செய்திகள்
May 26, 2026, 4:40 pm
தியாகம், மனவுறுதி, அர்ப்பணிப்புடன் தேவையுள்ளோருக்கு உதவுவதே குர்பான்: பிரதமர் அன்வார்
May 26, 2026, 11:48 am
ஜாஹிட்டிடம் மன்னிப்புக் கேட்குமாறு ஜொகூர் அரண்மனை எனக்கு அறிவுறுத்தியது: ஓன் ஹபிஸ்
May 26, 2026, 10:29 am
கம்போங் ஜாவா லாடாங் பத்து அம்பாட் தமிழ்ப்பள்ளி கட்டுமானத்தை விரைவுபடுத்த நடவடிக்கை: குணராஜ்
May 26, 2026, 10:15 am
