நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சுங்கை சிப்புட்டில் வாகன நிறுத்தும் வசதி இல்லததால்  பொதுமக்கள், வியாபாரிகள் கடும் அவதி: லோகநாதன்

சுங்கை சிப்புட்:

சுங்கை சிப்புட் நகரின் முக்கிய சாலைகளில் பார்க்கிங் வசதி இல்லாததால், பொதுமக்கள் , வியாபாரிகள் தினசரி செயல்பாடுகளில் கடுமையான சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

இதற்கு உரிய அரசாங்க இலாக்கள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று தாமான் ஈவுட் பாசா 1 மஇகா கிளைத் தலைவர் லோகநாதன் வலியுறுத்தினார்

நகரில் இருபுறங்களிலும் வாகனங்களை நிறுத்துவதற்கான போதுமான இடங்கள் இல்லாததால், வங்கிகள், கிளினிக்குகள், பிற அத்தியாவசிய சேவைகள் உள்ள பகுதிகளுக்கு வருகை தரும் பொது மக்கள் பெரும் பிரச்சனையை சந்தித்து வருகின்றனர்.

குறிப்பாக, வியாபாரிகள் வங்கிகளில் பணம் செலுத்துவதற்கும், பணத்தை எடுத்துச் செல்லுவதற்கும் பாதுகாப்பற்ற சூழ்நிலையில் செயல்பட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என குறிப்பிட்ட அவர்
இந்த பிரச்சனை பகல் நேரங்களில் மட்டுமின்றி, இரவு நேரங்களில் மேலும் தீவிரமடைந்து, பாதுகாப்பு அச்சுறுத்தலாக மாறி வருவதாகவும் குறிப்பிட்டார்

தாமான் ஈவுட் பாசா 1 மஇகா கிளையின் நடைபெற்ற ஆண்டு கூட்டதிற்கு வந்திருந்த பலர் இது தம்முடைய கவனத்திற்கு கொண்ட வந்தனர்.

அவசர மருத்துவ தேவைகளுக்காக முதியவர்கள், குழந்தைகளை கிளினிக்குகளுக்கு அழைத்து செல்லும் சூழ்நிலைகளிலும் கிளினிக் முன்புறம் வாகன நிறுத்துமிடம் இல்லாமை பெரும் தடையாக உள்ளது என்று மக்கள் கூறினர் என்றார்

மேலும், மஞ்சள் கோடு (No Parking Zone) பகுதிகளில் தற்காலிகமாக வாகனங்களை நிறுத்தும் போது, முன் அறிவிப்பு அல்லது எச்சரிக்கை இன்றி அதிகாரிகள் அபராதம் விதிப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

மேலும் சம்பவ இடத்திலேயே விளக்கம் அளிக்கும் வாய்ப்பு வழங்கப்படாமல் நேரடியாக அபராதம் அனுப்பப்படுவது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக எனவும் அவர் குறிப்பிட்டார்

இதனை முன்னிட்டு, சம்பந்தப்பட்ட அரசு தரப்பினர் விரைந்து உரிய நடவடிக்கையில் இறங்கி வாகன நிறுத்துமிட வசதிகளை உருவாக்கவும், அபராத நடைமுறைகளில் மனிதநேயமான அணுகுமுறையை கடைபிடிக்கவும் பொதுமக்கள் கோரிக்கை விடுக்கப்பட்ட நிலையில்
இந்த பிரச்சனைக்கு நிலையான தீர்வு காண விரைவான நடவடிக்கை அவசியம் எனவும் லோகநாதன் வலியுறுத்தினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset