செய்திகள் மலேசியா
நெகிரி செம்பிலான் தமிழ்ப்பள்ளிகளுக்கு இடையிலான கால்பந்து போட்டி: 380 மாணவர்கள் பங்கேற்றனர்
சிரம்பான்:
நெகிரி செம்பிலான் தமிழ்ப்பள்ளிகளுக்கு இடையிலான கால்பந்து போட்டியில் 380 மாணவர்கள் பங்கேற்றனர்.
நெகிரி செம்பிலான் இந்தியர் கால்பந்து சங்கமும் திவி ஜெயா விளையாட்டு கிளப்பும் இப்போட்டியை வெற்றிகரமாக நடத்தினர்.
12 வயதுக்கு கீழ்ப்பட்ட 380 விளையாட்டாளர்கள் இப்போட்டியில் கலந்து கொண்டனர்.
26 ஆண்கள், 12 பெண்கள் அணிகள் பங்கேற்ற இப்போட்டி சிரம்பான் தோட்ட தமிழ்ப்பள்ளியில் நடைபெற்றது.
நெகிரி செம்பிலான் கால்பந்து சங்கத்தின் துணைத் தலைவர் டத்தோ ஹாஜி முஸ்தபா, மிபா பொதுச் செயலாளர் தினேஷ் ஆகியோர் இப்போட்டியை தொடக்கி வைத்தனர்.
போட்டியாளர்கள் சிறப்பான திறனை வெளிப்படுத்தி பரிசுகளை தட்டிச் சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 26, 2026, 11:48 am
ஜாஹிட்டிடம் மன்னிப்புக் கேட்குமாறு ஜொகூர் அரண்மனை எனக்கு அறிவுறுத்தியது: ஓன் ஹபிஸ்
May 26, 2026, 10:29 am
கம்போங் ஜாவா லாடாங் பத்து அம்பாட் தமிழ்ப்பள்ளி கட்டுமானத்தை விரைவுபடுத்த நடவடிக்கை: குணராஜ்
May 26, 2026, 10:15 am
மலேசியா - இந்தியா உறவை மேலும் பலப்படுத்த மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் உறுதி
May 25, 2026, 2:53 pm
