நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

டான்ஸ்ரீ கென்னத் ஈஸ்வரன் மறைவிற்கு முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் இரங்கல்

கோலாலம்பூர்:

முன்னாள் மைக்கி தலைவர் டான்ஸ்ரீ கென்னத் ஈஸ்வரன் மறைவிற்கு முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் இரங்கலை தெரிவித்துள்ளார்.

மலேசிய இந்திய வர்த்தகர்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகள், அவர்களின் தேவை எதிர்பார்ப்புகளை நன்கு கண்டு அறிந்து அதனை அரசாங்கத்தின் பார்வைக்கு முறையாக கொண்டு வந்து பல நல்ல திட்டங்கள் உருவாக ஆலோசனை கொடுத்த ஒரு தலைவரை வர்த்தக சமூகம் இழந்து விட்டது.

தான் பிரதமராக இருந்த காலத்தில் இந்திய வர்த்தகர் பிரச்சினை தொடர்பாக பல முறை என்னை சந்தித்து பல திட்ட ஆலோசனைகளை வழங்கினார்.

ஒரு நல்ல சமுதாய அக்கறை உடைய தலைவரை வர்த்தக சமூகம் இழந்து விட்டது.

முன்னாள் பிரதமர் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் தனது முகநூல் வாயிலாக இதனை தெரிவித்தார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset