செய்திகள் மலேசியா
1223 நாட்களில் 109 நாடுகளை மோட்டார் சைக்கிளில் கடந்து கதிரவன் சுபராயன் சாதனை
பத்துகேவ்ஸ்:
கிட்டத்தட்ட 1223 நாட்களில் 109 நாடுகளை மோட்டார் சைக்கிளில் கடந்து கதிரவன் சுபராயன் புதிய சாதனையை படைத்துள்ளார்.
மலாக்காவைச் சேர்ந்த கதிரவன் மோட்டார் சைக்கிளில் உலகம் முழுவதும் பயணத்தை மூன்று ஆண்டுகளுக்கு முன் தொடங்கினார்.
பல்வேறு சவால்களுக்கு மத்தியில் 109 நாடுகளை கடந்துள்ளார். அதுவும் 1223 நாட்களில் அவர் பயணத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பினார்.
அவரின் இந்த பயணம் இன்று மாலை பத்துமலையில் நிறைவடைந்தது.
கதிரவனை வரவேற்கும் விழா மிகவும் சிறப்பான முறையில் நடைபெற்றது.
சிலாங்கூர் மாநில மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிரூடின் ஷாரி, மஇகா துணைத் தலைவரும் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ சரவணன், சுக்கிம் தலைவர் டத்தோ டி. மோகன், செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் குணராஜ், டத்தோஸ்ரீ மோக் ஹா வெய் உட்பட பலர் இதில் கலந்து கொண்டனர்.
முன்னதாக மூன்று ஆண்டுகளுக்கு பின் என் பயணத்தை தொடங்கிய இடத்திலேயே இன்று என் பயணத்தை முடித்துக் கொண்டுள்ளேன்.
குறிப்பாக மலேசியாவை போன்று ஒரு சிறந்த நாடு எங்குமே இல்லை என்பதை இப்பயணத்தின் மூலம் தெரிந்துக் கொண்டேன்.
மேலும் மரங்கள் நடுவது, இயற்கையை பாதுகாப்பது போன்ற விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் இப்பயணம் அமைந்திருந்தது.
இவ்வேளையில் எனது இப்பயணம் வெற்றிகரமாக முடிவதற்கு ஆதரவு தந்த அனைவருக்கும் நன்றி என்று கதிரவன் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
October 6, 2026, 5:45 pm
பெர்கேசோ இழப்பீட்டு கோரிக்கை செயலாக்க நேரத்தை சராசரியாக 2.7 நாட்களாகக் குறைத்துள்ளது: டத்தோ கைரூல்
October 6, 2026, 3:59 pm
16ஆவது மலாக்கா மாநிலத் தேர்தலுக்கான முக்கிய தேதிகள் நாளை அறிவிக்கப்படும்
October 6, 2026, 3:19 pm
மலாக்கா மாநிலத் தேர்தலுக்கு முன்னதாக தேசியக் கூட்டணியை முடக்க பெர்சத்து முயல்கிறது: தக்கியூடின்
October 6, 2026, 3:17 pm
பள்ளிகளில் 5,000-க்கும் மேற்பட்ட பகடிவதை சம்பவங்கள்; குற்றவாளிகளைப் பாதுகாக்க வேண்டாம்: பிரதமர்
October 6, 2026, 3:16 pm
ECRL டிக்கெட் விற்பனை நவம்பரில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது: எம்ஆர்எல்
October 6, 2026, 3:14 pm
