செய்திகள் மலேசியா
செந்தூல் வட்டார ஆலய நிர்வாகங்களுடன் கலந்துரையாடல்; நாட்டில் எந்த ஆலயமும் ஹராம் அல்ல: டத்தோ ராஜா சைமன்
கோலாலம்பூர்:
நாட்டில் எந்த ஆலயமும் ஹராம் அல்ல என்று கூட்டரசுப் பிரதேச மஇகா தலைவர் டத்தோ ராஜா சைமன் கூறினார்.
பத்து தொகுதி மஇகாவின் ஏற்பாட்டில் செந்தூல் வட்டார ஆலய நிர்வாகங்களுடன் கலந்துரையாடல் இன்று சிறப்பான முறையில் நடைபெற்றது.
கூட்டரசுப் பிரதேச நில இலாகா, டிபிகேஎல், போலிஸ் ஆகியவற்றில் இருந்து அதிகாரிகள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
45க்கும் மேற்பட்ட ஆலய நிர்வாகங்கள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டன.
செந்தூல் வட்டாரத்தில் உள்ள ஆலயங்களின் பிரச்சினைகள், அதற்கு எவ்வாறு தீர்வு காண்பது உட்பட பல விவகாரங்கள் குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
குறிப்பாக ஆலய நிலப் பிரச்சினைகள் குறித்தும் விரிவாக பேசப்பட்டது என்று டத்தோ ராஜா சைமன் கூறினார்.
இந்த நாட்டில் எந்த ஆலயமும் ஹராம் அல்ல. அனைத்தும் 40, 50 ஆண்டுகள் வரலாற்றைக் கொண்டதாகும்.
ஆக பிரச்சினைகள் உள்ள ஆலயங்களை ஹராம் என்று கூறாமல் அதற்கு எவ்வாறு தீர்வு காண்பது குறித்து ஆராய வேண்டும் என்று டத்தோ ராஜா சைமன் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 26, 2026, 11:48 am
ஜாஹிட்டிடம் மன்னிப்புக் கேட்குமாறு ஜொகூர் அரண்மனை எனக்கு அறிவுறுத்தியது: ஓன் ஹபிஸ்
May 26, 2026, 10:29 am
கம்போங் ஜாவா லாடாங் பத்து அம்பாட் தமிழ்ப்பள்ளி கட்டுமானத்தை விரைவுபடுத்த நடவடிக்கை: குணராஜ்
May 26, 2026, 10:15 am
மலேசியா - இந்தியா உறவை மேலும் பலப்படுத்த மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் உறுதி
May 25, 2026, 2:53 pm
