செய்திகள் மலேசியா
பள்ளியில் நேர்ந்த துயரம்: மயங்கி விழுந்த மாணவர் உயிரிழப்பு
ஷா ஆலம்:
காப்பாரில் உள்ள ஒரு பள்ளியில், சபைக்கூடலின் போது மயங்கி விழுந்ததைத் தொடர்ந்து, ஒரு ஆறாம் வகுப்பு மாணவர், நேற்று கிள்ளானில் உள்ள துங்கு அம்புவான் ரஹீமா மருத்துவமனையில் உயிரிழந்தார்.
12 வயதான பாதிக்கப்பட்டவர், சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்ட பின்னர், சம்பந்தப்பட்ட மருத்துவமனையில் இறந்ததாக உறுதி செய்யப்பட்டதாக கிள்ளான் உத்தரா மாவட்ட போலிஸ் தலைவர் உதவி ஆணையாளர் எஸ். விஜயா ராவ் கூறினார்.
"காலை 8.30 மணியளவில், சம்பந்தப்பட்ட பள்ளியில் சபைக்கூடலின் போது பாதிக்கப்பட்டவர் மயங்கி விழுந்ததாகத் தெரிகிறது. அதற்குப் பின்னர், சிகிச்சைக்காக அவர் சம்பந்தப்பட்ட மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
இருப்பினும், பின்னர் அவர் இறந்ததாக உறுதி செய்யப்பட்டார்" என்று இன்று தொடர்பு கொள்ளப்பட்ட போது அவர் தெரிவித்தார்.
பிரேத பரிசோதனையின் முடிவுகள், அந்தச் சம்பவம் தொடர்பான எந்தவொரு குற்றச் செயலின் அறிகுறிகளையும் கண்டுபிடிக்கவில்லை என்று விஜயா ராவ் கூறினார்.
"இதுவரை, மரணத்திற்கான காரணத்தை உறுதிப்படுத்த முடியவில்லை. முழுமையான ஆய்வக அறிக்கைக்காக இன்னும் காத்திருக்கிறோம். மேலும், இந்த வழக்கு திடீர் மரணம் என வகைப்படுத்தப்பட்டுள்ளது" என்றார் அவர்.
-சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
May 9, 2026, 5:36 pm
மரணக்குழியாக மாறிய மணல் திட்டு: கான்கிரீட் கல் சரிந்து விழுந்ததில் சிறுவன் மரணம்
May 9, 2026, 2:44 pm
கெப்போங் ஆற்றில் விழுந்த நபர் 3 நாட்களுக்குப் பின் சடலமாக மீட்பு
May 9, 2026, 11:43 am
