நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சட்டவிரோதத் தங்குதலுக்கு முற்றுப்புள்ளி: 24 சீனக் குடிமக்கள் சொந்த நாட்டிற்குத் திருப்பி அனுப்பப்பட்டனர்

செம்போர்னா:

கடந்த மாதம், சபாவின் செம்போர்னாவில் நடத்தப்பட்ட குடிநுழைவுத் துறையின் (ஜே.ஐ.எம்) நடவடிக்கையில் தடுத்து வைக்கப்பட்ட 24 சீன குடிமக்கள், தங்கள் சொந்த நாட்டிற்குத் திருப்பி அனுப்பப்பட்டனர்.

1959/63 ஆம் ஆண்டின் குடிநுழைவுத் சட்டம், 1963 ஆம் ஆண்டின் குடிநுழைவு விதிமுறைகளை மீறியதாகக் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, 23 ஆண்களூம் ஒரு பெண் உட்பட அனைவரும் மலேசியாவுக்குள் நுழைவதிலிருந்து தடை செய்யப்பட்டனர்.

ஏப்ரல் 21 ஆம் தேதி செம்போர்னாவில் நடத்தப்பட்ட 'ஓப் குத்திப்', 'ஓப் மாஹிர்', 'ஓப் ஸாபு' ஆகிய நடவடிக்கைகளில் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, நேற்று முன்தினம் திருப்பி அனுப்புதல் செயல்படுத்தப்பட்டதாக சபா குடிநுழைவு இயக்குநர் ஷ் சித்தி சலேஹா ஹபீப் யூசோஃப் கூறினார்.

அந்த நடவடிக்கைகள், 45 நபர்களைச் சோதனை செய்வதை உள்ளடக்கியிருந்தன. அதற்குப் பின்னர், பல்வேறு குடிநுழைவுக் குற்றங்களைச் செய்ததாக சந்தேகிக்கப்பட்ட 34 வெளிநாட்டினர் தடுத்து வைக்கப்பட்டனர்.

"தடுத்து வைக்கப்பட்டவர்களில், 30 ஆண்கள், மூன்று பெண்கள் என 33 சீன குடிமக்களும், ஒரு பாகிஸ்தான் ஆடவரும் ஆவர்.

"1963 ஆம் ஆண்டின் குடிநுழைவு விதிமுறைகளின் விதி 39(b), 1959/63 ஆம் ஆண்டின் குடிநுழைவுச் சட்டத்தின் பிரிவு 15(1)(c) ஆகியவற்றின் கீழ் அவர்கள் விசாரிக்கப்பட்டனர்" என்று அவர் இன்று வெளியிட்ட ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

கடந்த மே 4 ஆம் தேதி, தாவாவ் செஷன் நீதிமன்றத்தில், ஒன்பது சீன குடிமக்களை உள்ளடக்கிய, தடுத்து வைக்கப்பட்டவர்களில் ஒரு பகுதியினருக்கு எதிரான விசாரணை, வழக்குத் தொடுப்பு நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டதாக அவர் கூறினார்.

1963 ஆம் ஆண்டின் குடிநுழைவு விதிமுறைகளின் விதி 39(b) கீழ் குற்றஞ்சாட்டப்பட்ட ஆறு சீன ஆண்கள், குற்றமற்றவர்கள் என மறுத்தனர். அடுத்த ஜூன் 11 ஆம் தேதி வரை வழக்கு மீண்டும் விசாரிக்கப்படும் வரை, அவர்கள் நீதிமன்ற ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

"இதற்கிடையில், இரண்டு பெண்கள், ஒரு ஆண் என மூன்று சீன குடிமக்கள், 1959/63 ஆம் ஆண்டின் குடிவரவுச் சட்டத்தின் பிரிவு 15(1)(c), 1963 ஆம் ஆண்டின் குடிநுழைவு விதிமுறைகளின் விதி 39(b) ஆகிய இரண்டு குற்றங்களின் கீழ் குற்றஞ்சாட்டப்பட்டனர்.

"இவர்கள் மூவரும் குற்றத்தை ஒப்புக்கொண்டனர். மேலும், 1959/63 ஆம் ஆண்டின் குடிநுழைவுச் சட்டத்தின் பிரிவு 15(1)(c) கீழான குற்றத்திற்கு அபராதம் செலுத்தினர். இருப்பினும், விதி 39(b) கீழான குற்றச்சாட்டிற்கு நீதிமன்றம் எந்த ஜாமீனையும் வழங்கவில்லை" என்றார் அவர்.

-சங்கீர்த்தனா 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset