செய்திகள் மலேசியா
டத்தோஸ்ரீ ஹம்சாவின் ஆதரவுடன் புரட்சி கழகம் முழு நேர தீவிர அரசியலில் களமிறங்குகிறது: உமா காந்தன்
பெட்டாலிங்ஜெயா:
டத்தோஸ்ரீ ஹம்சாவின் ஆதரவுடன் புரட்சி கழகம் முழு நேர தீவிர அரசியலில் களமிறங்குகிறது.
புரட்சி இயக்கத்தின் தலைவர் உமா காந்தன் இதனை கூறினார்.
கடந்த 2014ஆம் ஆண்டு முதல் புரட்சி கழகம் செயல்பட்டு வருகிறது.
ஆனால் 2019ஆம் ஆண்டு முதல் தான் முழுமையாக மக்கள் பணிகளில் ஈடுப்பட்டு வருகிறது.
குறிப்பாக பல்வேறான மக்கள் பிரச்சினைகளுக்கு புரட்சி கழகம் குரல் கொடுத்துள்ளது.
அதே வேளையில் பல்வேறான பிரச்சினைகளுக்கு வீதியில் இறங்கி போராடி உள்ளது.
பல போராட்டங்களை நடத்தினாலும் அரசியல் ரீதியில் எங்களுக்கு எந்த அங்கீகாரமும் கிடைப்பது இல்லை.
அதே வேளையில் எங்கள் போராட்டங்களுக்கு எந்தவொரு தீர்வும் கிடைப்பது இல்லை.
இதன் அடிப்படையில் தான் கடந்தாண்டு ஓர் அரசியல் கட்சியில் இணைந்தோம். ஆனால் அங்கும் எங்களுக்கு ஏமாற்றம் தான்.
இதன் காரணமாக தான் புரட்சி கழகம் தற்போது முழு நேர தீவிர அரசியலில் இறங்குகிறது.
நாட்டின் எதிர்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ ஹம்சாவின் ஆதரவுடன் எங்களின் பயணம் தொடரவுள்ளது.
சாதகமோ அல்லது பாதகமோ எது இருந்தாலும் டத்தோஸ்ரீ ஹம்சாவை தான் நாங்கள் தொடரவுள்ளோம்.
மேலும் வரும் ஜூன் 6ஆம் தேதி புரட்சியின் மாபெரும் அரசியல் மாநாடு நடைபெறவுள்ளது. இம்மாநாட்டில் பல முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்படவுள்ளது.
அங்கிருந்து தான் எங்களின் அரசியல் பயணம் தொடங்கும் என்று உமா காந்தன் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 9, 2026, 5:36 pm
மரணக்குழியாக மாறிய மணல் திட்டு: கான்கிரீட் கல் சரிந்து விழுந்ததில் சிறுவன் மரணம்
May 9, 2026, 4:51 pm
பள்ளியில் நேர்ந்த துயரம்: மயங்கி விழுந்த மாணவர் உயிரிழப்பு
May 9, 2026, 2:44 pm
கெப்போங் ஆற்றில் விழுந்த நபர் 3 நாட்களுக்குப் பின் சடலமாக மீட்பு
May 9, 2026, 11:43 am
