நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சிறைச்சாலை நெரிசலுக்கு முற்றுப்புள்ளி: சிறை தண்டனை கைதிகளுக்கும் மறுவாழ்வு அளிக்க புதிய சட்டத்திருத்தம்

ஜொகூர் பாரு:

நான்கு ஆண்டுகள், அதற்குக் கீழ் சிறைத்தண்டனை விதிக்கக்கூடிய குற்றங்களுக்கு மட்டும் குற்றங்களின் வகை வரம்பிடப்படாமல் இருப்பதை உறுதி செய்வதற்காக, 1955 ஆம் ஆண்டின் சிறிய குற்றங்கள் சட்டத்தைத் திருத்தும் இறுதிக் கட்டத்தில் உள்துறை அமைச்சு (கே.டி.என்) இப்போது உள்ளது.

அந்தத் திருத்தம், 10 ஆண்டுகள், அதற்குக் கீழ் வரையிலான சிறைத்தண்டனையை விதிக்கக்கூடிய குற்றங்களை உள்ளடக்கியதாக, சிறிய குற்றங்களின் வகையை விரிவுபடுத்தும் என்று உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைஃபுதீன் நசுத்தியோன் இஸ்மாயில் கூறினார்.

75,000 என்ற அசல் கொள்ளளவை விட, 87,000 க்கும் மேற்பட்டோருடன், சிறைகள் கூட்ட நெரிசலைச் சந்தித்து வருவதால், நோய்கள், சண்டைகள், அசௌகரியங்களுக்கு ஆளாகும் நிலையில், அந்த நடவடிக்கை சிறை நெரிசலைக் குறைக்கும் என்றார் அவர்.

அந்த அணுகுமுறை, சிறைத்துறை மூலம் சிறைக் கைதிகளைப் பணியமர்த்துவதன் மூலமாக, தொழிலாளர் பற்றாக்குறைப் பிரச்சினையைச் சமாளிக்கவும் உதவும் என்று அவர் கூறினார். இருப்பினும், தற்போது, அதன் செயலாக்கமானது, நான்கு ஆண்டுகளுக்குக் கீழ் சிறைத்தண்டனை பெற்ற சிறிய குற்றவாளிகளை மட்டுமே உள்ளடக்கியுள்ளது.

"10 ஆண்டுகள், அதற்குக் கீழ் என்றால், அவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். இருப்பினும், நாங்கள் அவ்வாறு எளிதாக பேசுவதில்லை. இது (பணியமர்த்தல்) ஒரு சல்லடை செயல்முறையின் மூலமாகவும் உள்ளது" என்று இன்று இங்குள்ள FOZ ஒன்-ல், இந்த மாநிலத்தில் உள்ள பல்வேறு துறைகளைச் சேர்ந்த 80 தொழில்துறை வீரர்களுடனான 'எங்கேஜிங் இண்டஸ்ட்ரி, ஷேப்பிங் சொல்யூஷன்ஸ்' உரையாடல் அமர்வுக்குப் பின்னர் நடைபெற்ற ஊடகச் சந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவி்த்தார்.

சிறைக் கைதிகளைத் தொழிலாளர்களாகப் பணியமர்த்துவது, சிறைக் குழுவின் பல்வேறு மதிப்பீட்டு செயல்முறைகள் மூலமாகச் செயல்படுத்தப்படுவதாக சைஃபுதீன் நசுத்தியோன் கூறினார். இதில், முதல் முறைக் குற்றத்திற்காகச் சிறையில் அடைக்கப்பட்ட கைதிகளை அடையாளம் காண்பதும் அடங்கும் என்றார் அவர்.

"எடுத்துக்காட்டாக, அவர் ஒரு நேர்மறையான அணுகுமுறையைக் கொண்டிருக்கிறாரா, சிறையில் இருக்கும் காலம் முழுவதும் அவர் ஒத்துழைப்பை வழங்குகிறாரா, ஒழுக்கச் சிக்கல்கள் எதுவும் இல்லையா என்பதையும் நாங்கள் பார்க்கிறோம்" என்றார் அவர்.

-சங்கீர்த்தனா 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset