செய்திகள் மலேசியா
நேற்று இரவு பெய்த கனமழையைத் தொடர்ந்து, 12 குடும்பங்களைச் சேர்ந்த 44 பேர் சுங்கை தெங்காஸ் தற்காலிக நிவாரண மையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்
பண்டார் பாரு:
நேற்று இரவு பெய்த கனமழையைத் தொடர்ந்து, 12 குடும்பங்களைச் சேர்ந்த 44 திடீர் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் டேவான் கேடா சுங்கை தெங்காஸ் தற்காலிக நிவாரண மையத்திற்கு (PPS) அனுப்பப்பட்டுள்ளனர்.
இன்று காலை 9.30 மணி நிலவரப்படி பதிவுசெய்யப்பட்ட இந்த எண்ணிக்கை, காம்பங் சுங்கை தெங்காஸ் பகுதியைச் சேர்ந்தவர்களை உள்ளடக்கியது என்று பண்டார் பாரு குடிமைப் பாதுகாப்புப் படை அதிகாரி லெப்டினன்ட் அப்துல் ரஹீம் கைருதீன் கூறினார்.
பாதிக்கப்பட்டவர்களில் 14 ஆண்கள், 14 பெண்கள், ஒன்பது குழந்தைகள், மூன்று பச்சிளங்குழந்தைகள், நான்கு மூத்த குடிமக்கள் அடங்குவர்.
"நேற்று இரவு 8.30 மணி முதல் அவர்கள் தற்காலிக நிவாரண மையத்திற்கு (PPS) மாற்றப்பட்டனர். இன்னும் அந்தப் பகுதியில் மழை பெய்து கொண்டிருக்கிறது," என்று அவர் இன்று தெரிவித்தார்.
நேற்று இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த கனமழையால், சுங்கை பத்து, செலமா, பாகன் சமக், செர்டாங் ஆகிய நான்கு நகரங்களில் உள்ள ஐந்து கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கின என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 9, 2026, 5:36 pm
மரணக்குழியாக மாறிய மணல் திட்டு: கான்கிரீட் கல் சரிந்து விழுந்ததில் சிறுவன் மரணம்
May 9, 2026, 4:51 pm
பள்ளியில் நேர்ந்த துயரம்: மயங்கி விழுந்த மாணவர் உயிரிழப்பு
May 9, 2026, 2:44 pm
கெப்போங் ஆற்றில் விழுந்த நபர் 3 நாட்களுக்குப் பின் சடலமாக மீட்பு
May 9, 2026, 11:43 am
