நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கெப்போங் ஆற்றில் விழுந்த நபர் 3 நாட்களுக்குப் பின் சடலமாக மீட்பு

கோலாலம்பூர்:

கடந்த புதன்கிழமை, கெப்போங்கில் உள்ள சுங்கை கேரூவில் விழுந்ததாகப் புகாரளிக்கப்பட்டு, மூன்று நாட்களுக்குப் பிறகு, நேற்று ஆடவர் ஒருவர் இறந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார்.

மாலை 5.27 மணியளவில் இந்தச் சம்பவம் குறித்த அவசர அழைப்பைப் பெற்றதாக கோலாலம்பூர் குடிமைப் பாதுகாப்புப் படை (ஏ.பி.எம்) தெரிவித்துள்ளது.

"செந்தூல் ஏ.பி.எம்-மைச் சேர்ந்த ஒரு தேடுதல், மீட்பு (ஸார்) குழு, அந்த இடத்திற்கு அனுப்பப்பட்டது.

"ஸார் குழுவிற்கு மூன்று நாட்கள் ஆனது. தேடுதல் பகுதி, சுங்கை கேரூ, சுங்கை கோம்பாக், சுங்கை கிள்ளான் உள்ளிட்ட 16 கிமீ ஆரம் வரை நீட்டிக்கப்பட்டது.

"நேற்று, ஸார்-இன் மூன்றாவது நாளில், அல்-குர்துபி மசூதி, தாமான் ஸ்ரீ செகாம்புட் அருகிலுள்ள ஒரு நீர்த்தேக்கக் குளத்தில், பாதிக்கப்பட்டவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது" என்று ஏ.பி.எம் தெரிவித்துள்ளது.

இங்குள்ள ஜாலான் குவாங் புலான், கெப்போங்கில், அவர் விழுந்ததாக நம்பப்படும் இடத்திலிருந்து சுமார் நான்கு கிலோமீட்டர் (கிமீ) தொலைவில், பாதிக்கப்பட்டவர் அடித்துச் செல்லப்பட்டு, கண்டுபிடிக்கப்பட்டதாக ஏ.பி.எம் கூறியுள்ளது.

ஏ.பி.எம்-ஆல் பாதிக்கப்பட்டவரின் உண்மையான அடையாளத்தை உறுதிப்படுத்த முடியவில்லை என்றும், மேலதிக விசாரணைக்காக இறந்தவரின் உடல் போலிஸாரிடம்  ஒப்படைக்கப்பட்டதாகவும் அது கூறியுள்ளது.

போலிஸார், தீயணைப்பு, மீட்புத் துறை, மற்றும் கோலாலம்பூர் மாநகராட்சியின் மீட்புக் குழு உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களின் ஒத்துழைப்புடன், நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக ஏ.பி.எம் தெரிவித்துள்ளது.

-சங்கீர்த்தனா 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset