செய்திகள் மலேசியா
ஆடம்பரக் கார்களை வாங்க முடிந்தவர்களுக்கு சாலை வரி, காப்பீடு எடுக்க முடியவில்லை: ஜேபிஜே
சிரம்பான்:
ஆடம்பரக் கார்களை வாங்க முடிந்தவர்களுக்கு சாலை வரி, காப்பீடு எடுக்க முடியவில்லை.
நெகிரி செம்பிலான் சாலைப் போக்குவரத்துத் துறையின் (ஜேபிஜே) இயக்குநர் ஜஸ்யிந்தர் சிங் இதனை கூறினார்.
நெகிரி செம்பிலான் சாலைப் போக்குவரத்துத் துறை இந்த ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் சாலை வரி, காப்பீடு இல்லாத 45 சொகுசு வாகனங்களைப் பறிமுதல் செய்துள்ளது.
சாலை விதிகளை மீறிய சொகுசு வாகனங்கள் மீதான இயக்குநரின் சிறப்பு நடவடிக்கைப் பிரிவின் மூலம் இந்தப் பறிமுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
பறிமுதல் செய்யப்பட்ட மூன்று சொகுசு வாகனங்களில் தலா 4 போர்ஷே, ஒரு ஆவ்டி, தலா மூன்று டொயோட்டா அல்பார்ட், வெல்ஃபயர் கார்கள், மெர்சிடிஸ் பென்ஸ் (15), பிஎம்டபிள்யூ (12), எட்டு பிற வாகனங்களும் அடங்கும்.
பறிமுதல் செய்யப்பட்ட கார்களின் உரிமையாளர்களில் ஒருவர 40 வயதுக்கு மேற்பட்ட டத்தோ பட்டம் பெற்ற ஆடவரும் அடங்கும்.
ஏனெனில் அவரது வாகனத்திற்கு சாலை வரி இல்லை, காப்பீடு காலாவதியாகிவிட்டது என்று அவர் கூறினார்.
ஒரு சில சொகுசு வாகன உரிமையாளர்கள் காப்பீடு, சாலை வரி செலுத்துவதில் அலட்சியமாக இருந்தது கண்டறியப்பட்டது.
அவர்களில் சிலர், குற்றவுணர்ச்சியின்றி சாலையில் சுதந்திரமாக வாகனம் ஓட்டக்கூடிய தொழிலதிபர்கள் உள்ளிட்ட டத்தோ பட்டம் கொண்ட தொழில் வல்லுநர்களாகவும் இருந்தனர் என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 9, 2026, 5:36 pm
மரணக்குழியாக மாறிய மணல் திட்டு: கான்கிரீட் கல் சரிந்து விழுந்ததில் சிறுவன் மரணம்
May 9, 2026, 4:51 pm
பள்ளியில் நேர்ந்த துயரம்: மயங்கி விழுந்த மாணவர் உயிரிழப்பு
May 9, 2026, 2:44 pm
