நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சுங்கைபூலோவில் எஸ்பிஎம் தேர்வில் தேர்ச்சிப் பெற்ற 934 மாணவர்களுக்கு ஊக்கத் தொகை: டத்தோஸ்ரீ ரமணன் வழங்கினார்

சுங்கைபூலோ:

சுங்கை பூலோ நாடாளுமன்றத் தொகுதியைச் சேர்ந்தவர்கள் கடந்தாண்டு எஸ்பிஎம் தேர்வில் தேர்ச்சி பெற்ற மொத்தம் 934 சிறந்த மாணவர்கள் ஊக்கத் தொகையைப் பெற்றனர்.

இந்த ஊக்கத்தொகையை எச்ஆர்டி கோர்ப்புடன் இணைந்து மனிதவள அமைச்சு வழங்கியது என்று அதன் அமைச்சர்  டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.

மாணவர்களை எதிர்காலத்தில் மேலும் வெற்றிபெற ஊக்குவிக்கும் வகையில் இந்த ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது.

குறிப்பாக சுங்கை பூலோ  நாடாளுமன்றத் தொகுதி மாணவர்களின் கல்வித் தரத்தை மேம்படுத்துவதில் எச்ஆர்டி கோர்ப் வழங்கிய உறுதியான, அசைக்க முடியாத ஆதரவை நான் மிகவும் பாராட்டுகிறேன்.

இந்த உன்னதமான முயற்சியின் மூலம் நாட்டின் கல்வித் தரத்தை அடுத்த கட்டத்திற்கு மேம்படுத்த முடியும்.

மேலும், இந்த திட்டத்தை ஒவ்வொரு ஆண்டும் செயல்படுத்த முடியும் என்பதை உறுதி செய்வேன் என டத்தோஸ்ரீ ரமணன் தெரிவித்தார்.

முன்னதாக சுங்கைபூலோ சுற்றுவட்டாரத்தில் உள்ள இடைநிலைப் பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் இந்த ஊக்கத் தொகையை பெற்றனர்.

குறிப்பாக 4 ஏ பெற்ற மாணவர் முதல் அனைத்து மாணவர்களுக்கும் இந்த ஊக்கத் தொகை வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் எச்ஆர்டி கோர்ப் தமைலை இயக்குநர் டத்தோ ஷமிர் அஜிஸ் உட்பட பல பிரமுகர்கள் கலந்து கொண்டார்.

சிறந்த மாணவர்களுக்கு வழங்கப்படும் ஊக்குவிப்பு, அவர்கள் தொடர்ந்து கல்வியில் வெற்றிபெறுவதற்கு உந்து சக்தியாக இருக்கும்.

அதே சமயம், சிறந்த தேர்ச்சி அடைவதற்கான உத்வேகத்தைத் தொடர்ந்து பேணுவதற்கும், நாட்டின் மனித மூலதனத்தை அதிகரிப்பதற்கும் இந்த ஊக்குவிப்பு நிதி அவர்களின் உணர்வை வலுப்படுத்தும்.

எச்ஆர்டி கோர்ப் வெறும் ஊக்கத் தொகை வழங்குவதோடு மட்டுமல்லாமல், மாணவர்கள் பெற்ற வெற்றிக்கு அங்கீகாரம் அளிக்கிறது என்பதற்கு இந்த முயற்சி சான்றாகும் என்று டத்தோ ஷமிர் அஜிஸ் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset